வெளிநாடு செல்ல விரும்பாத வாலிபர் தற்கொலை


தேவகோட்டை அருகேயுள்ள இளங்குடியைச் சேர்ந்தவர் பாண்டியன் வெளிநாட்டில் இருக்கிறார். இவரது மகன் மாதவன் (22) சென்னையில் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். மாதவன் பாரில் வேலைசெய்வதை பிடிக்காத பாண்டியன் மகனை வெளிநாட்டில் வேலைக்கு சேர்க்க ஆசைப்பட்டார். மாதவனுக்கோ வெளிநாடு செல்ல விருப்பமில்லை.எனினும் பாண்டியன் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். சில தினங்களுக்கு முன் விசாவும் வந்து விட்டது. ஒருசில தினங்களில் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வெளிநாட்டிற்கு செல்ல விருப்பமில்லாததை வீட்டில் கூறியபோது தந்தை பேச்சை கேள் என்று கூறிவிட்டனர். வெளிநாட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்த மாதவன் நேற்று காலை கோயிலுக்கு போவதாக கூறி விட்டு சென்றார். வெகுநேரமாகியும் வராததால் தாய் ஆனந்தி தேடிபார்த்தபோது அருகில் உள்ள தோட்டத்தில் களைக்கொல்லி மருந்து குடித்து பிணமாக கிடந்தார். இது தொடர்பாக திருவேகம்பத்தூர் எஸ்.ஐ. மாணிக்கம் விசாரித்து வருகிறார். இறந்து போன மாதவன் சில ஆண்டுகளுக்கு முன் தந்தையின் முயற்சியால், மாதவனை ஐ.டி.ஐயில் சேர்த்தபோதும் பிடிக்காமல் மாதவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போது அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார். இந்த முறை விஷம் அருந்தி நேரமானதால் காப்பாற்ற முடியவில்லை.

Advertisements
சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »