தேவகோட்டையில் லாட்டரி விற்பனை


தேவகோட்டை : தேவகோட்டையின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை ஜெ.,முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பொது மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். கூலி தொழிலாளர் குடும்பங்கள் பிழைத்தது. லாட்டரி விற்றவர்கள் வேறு தொழிலுக்கு திரும்பினர்.கடந்த தி.மு.க., ஆட்சியில் லாட்டரி வியாபாரிகளை கண்டு கொள்ளாததால் லாட்டரி விற்பனை தாராளமாக நடந்தது. மீண்டும் ஜெ. முதல்வராகியுள்ளதால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »