மலேசிய முருகன் கோவிலுக்கு ரூ.2 1/2 கோடி மதிப்பில் காரைக்குடியில் உருவாகி வரும் வெள்ளிரதம்


மலேசிய முருகன் கோவிலுக்கு ரூ.21/2 கோடி மதிப்பில் காரைக்குடி சிற்பி வெள்ளி ரதத்தை உருவாக்கி வருகிறார்.


சிற்பி

காரைக்குடி செக்காலை சாலையில் சிற்பகூடம் நடத்தி வருபவர் சில்பி சேது தியாகராஜன். இவர் கோவில்களுக்கு தேவையான தங்கம், வெள்ளி ரதங்கள், தேர்கள், வாகனங்கள் செய்வதில் சிறப்பு பெற்றவர். இவரது கைத்திறனில் உருவானவை உலகெங்கும் உள்ள கோவில்களில் உள்ளன.

தற்போது மலேசியாவில் உள்ள கெடா மாகாணத்தில் உள்ள சுங்கப்பட்டாணி முருகன் கோவிலுக்கு ரூ.21/2 கோடி மதிப்பில் வெள்ளி கோரதம் சில்பி சேதுதியாகராஜனால் உருவாக்கப்பட்டு வருகிறது. 213/4 அடி உயரத்தில் உருவாகி வரும் இந்த ரதத்தில் 480 கிலோ வெள்ளி, 366 கனஅடி பர்மா தேக்கு மரம் பயன்படுத்தப்படுகிறது.

விக்ரகங்கள்

வழக்கமான ரதங்களில் இருந்து இந்த ரதம் வெகு வித்தியாசமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரதத்தில் பிரம்மா, 5 குதிரைகள், வெண்சாமரம் வீசும் பெண்கள் 4, துதிக்கை யாழிவாகனங்கள் 8, தூணில் இரு மயில்கள், மேலும் 32 ரதக்கூடு, பூதங்கள் 8, அறுபடை முருகன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள், கர்ணக்கூடு 8, சூரியகாந்தி பூ 8 உள்ளிட்ட விக்ரகங்கள் ரதத்தில் பொருத்தப்பட்டு வருகின்றன.

தினமும் 15 பேர் பணிபுரிய 14 மாத காலத்தில் இந்த ரதபணியினை முடித்து விட சில்பி சேது தியாகராஜன் திட்டமிட்டுள்ளார். ஆகம விதிகளுக்கு உட்பட்டு வித்தியாசமான புதிய முறையில் பக்தர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த வெள்ளி கோரதம் உருவாகி வருகிறது. ரதத்தினை உருவாக்கி வரும் சில்பி சேது தியாகராஜன் மத்திய மாநில அரசுகளால் பல்வேறு விருதுகளைப்பெற்றவர்.

இந்தியாவிற்கு பெரிய அளவில் அந்நிய செலவாணிகளை ஈட்டித்தரும் சில்பி சேது தியாகராஜனுக்கு சமீபத்தில் தமிழக பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் ராஜகலைஞன் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

பெண்ணை கட்டிபோட்டு நகை கொள்ளை: பெரியகாரையை சேர்ந்த 2 பேர் கைது


காரைக்குடி : காரைக்குடியில், பத்திரிகை தரவேண்டும் எனக்கூறி, வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 18.5 பவுன் நகை திருடிய, இருவரை போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணியபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் அம்பலம். இவரது மனைவி புஷ்பவள்ளி (46). கணவர் மலேசியாவில் இருப்பதால், தாய் லட்சுமியுடன் வசிக்கிறார். ஏப்., 29ம் தேதி பகல் 12 மணிக்கு, டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் திருமண பத்திரிகை தரவேண்டும் எனக்கூறி வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு தனியாக இருந்த புஷ்பவள்ளியிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அவரை கயிறால் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 18.5 பவுன் நகை, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரித்தார்.

நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை ரஸ்தாவில், வாகன சோதனை நடந்தது. அவ்வழியாக டூவீலரில் வந்த வேகோட்டை பெரியகாரையை சேர்ந்த சிவலிங்கம் மகன் சுரேஷ் (32), ராமநாதன் மகன் முத்துக்குமாரை (29) சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரும், புஷ்பவள்ளியை கட்டி போட்டு திருடியதாக தெரிவித்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து, 18.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.