தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்


தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

யூனியன் கூட்டம்

தேவகோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.செந்தில்நாதன் தலை மையில் நடைபெற்றது. கமிஷனர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி சுந்தர் ராஜன், துணைத் தலை வர் சவுந்தரம் பிர்லா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

கூட்டத்தில் 15 தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுநிதியில் இருந்து ரூ.ஒருகோடியே 15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு:-

பெரியண்ணன் அம்பலம் (அ.தி.மு.க.)- போரிவயல் பாலம் தயார் நிலையில் உள்ளதால் தேவகோட்டை- புலியடிதம்பம் பஸ்சை இயக்க வேண்டும். ஈகரையில் பெரிய பாலம் அமைக்க வேண்டும். தென்னீர் வயலில் திருமண மண்டபம் கட்ட வேண்டும். அங்கு புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டவேண்டும். தேவகோட்டை ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டியவர் களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் முதல்வர் திட்டம் என்பதால் கால தாமதம் செய்யாமல் பணம் பட்டுவாடா செய்யவேண் டும்.

முத்துகுமரேசன் (அ.தி. மு.க.):- கொங்கன்பட்டியில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. பருத்தியூர் மற்றும் சிவனூரில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலை யில் உள்ளதால் மனித உயிர் களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். செழுகையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கவேண்டும்.

சிமெண்டுசாலை

டேவிட் (தே.மு.தி.க.):- கிளியூர் ஊரணி மேல்கரையில் சிமெண்டு சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ராயர்பட்டினத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். வாயிலானேந்தல் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

ஸ்டெல்லா ஜோசப் (அ.தி.மு.க.):- புளியால் பஞ்சாயத் தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்சிராணி (இந்திய கம் யூனிஸ்டு):- விளாங்காட்டூரில் புதிய ரேஷன்கடை கட்ட வேண்டும்.

திருநாவுக்கரசு (அ.தி.மு.க.):- இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்ட பயனா ளிகள் தேர்ந்தெடுக்கும் போது, கவுன்சிலர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மராமத்து


திலகபாரதி (அ.தி.மு.க.):-
திராணியில் இருந்து தேவகோட்டை, சருகனி, புலியடி தம்பம் வழியாக பஸ் விட வேண்டும். திராணி மற்றும் வெள்ளி கட்டியில் திருமண மண்டபம் கட்டவேண்டும். உறுதிகோட்டையில் தண்ணீர் பற்றாக்குறையாகஉள்ளது. அதை போக்குவதற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

லலிதா (அ.தி.மு.க.):– கொடிக்குளம் கண்மாயில் கொடி பூவரசை அகற்றி மண் மராமத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Advertisements

எழுவங்கோட்டை ஆற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு


தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை தேர்தலுக்கு பின், புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசே மணல் குவாரியை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் நேற்று “பொக்லைன்’ இயந்திரம் மூலம் மணல் எடுக்கும் முயற்சி நடந்தது. அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் மணல் அள்ளியதால், குடிநீர் ஆதாரம் பாதிக்கும் எனக்கூறி, எழுவங்கோட்டை, போரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள், மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு சென்ற தாலுகா இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். ஊராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், அணைக்கட்டில் மணல் அள்ள தடை இருந்தும், மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆற்றில் இரண்டு ஆழ்குழாய் கிணறு போட்டுள்ளோம். ஆற்றை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில், மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.

தேவகோட்டை ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் கூறுகையில்,”” எழுவங்கோட்டை மணல் குவாரியை அரசே ஏற்று நடத்துகிறது. தனியாக யாருக்கும் குத்தகை தரவில்லை. மணல் தட்டுப்பாட்டை போக்க, நேற்று முன்தினம் முதல் இங்கு, அரசு மணல் குவாரி துவக்கியுள்ளது. இதில் தனியார் தலையீடு இல்லை. இது குறித்து அக்கிராம மக்களிடம் எடுத்து கூற உள்ளேன்,” என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »