கணவர் கொடுமை மனைவி தீக்குளிப்பு


தேவகோட்டை அருகேயுள்ள வேட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த துரைராஜ் மகள் முருகேஸ்வரி (27) . மக்கள் நல பணியாளராக உள்ளார்.

முருகேஸ்வரியை பொன்னிவயலை சேர்ந்த பாண்டியன் என்ற பரமேஸ்வரனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் மூன்றாம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர். பரமேஸ்வரன் தற்போது குடித்து விட்டு முருகேஸ்வரியை துன்புறுத்தி வந்துள்ளார். வெறுப்படைந்து தந்தை வீட்டிற்கு முருகேஸவரி வந்து விட்டார். மனமுடைந்த முருகேஸ்வரி தீ வைத்துக் கொண்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். திருமணமாகி மூன்றே மாதமாகியதால் தேவகோட்டை ஆர்.டி.ஒ. பன்னீர் செல்வம் விசாரணை செய்து வருகிறார். மனைவி தற்கொலைக்கு காரணமான கணவர் பரமேஸ்வரனை கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisements
சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »