தேவகோட்டை, மானாமதுரையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., நியமனம்


சிவகங்கை : காஞ்சிபுரத்தில் பயிற்சியில் இருந்த எஸ். சமன்ந்த்ரோஷன் ராஜேந்திரா, தேவகோட்டை ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.தேவகோட்டை சப்- டிவிஷனில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், நகைக்கடை, வீடுகளில் நடக்கும் திருட்டு,கொள்ளையை தடுக்க, இங்கு, ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் ஏ.எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக, அஸ்வின்கோட்னீஸ் இங்கு ஏ.எஸ்.பி.,யாக இருந்தார். அவருக்கு பின், டி.எஸ்.பி.,க்களே இருந்தனர். இதனால், இங்கு தீவிர கண்காணிப்பு இன்றி தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்காளிகள் வீடுகளிலேயே பல லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.

இது போன்று திருட்டுக்களை தடுக்கும் வகையில், இங்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்து காஞ்சிபுரத்தில் பயிற்சியில் இருந்த, எஸ். சமன்ந்த்ரோஷன் ராஜேந்திராவை, தேவகோட்டை ஏ.எஸ்.பி.,யாக நியமித்து, உள்துறை செயலாளர் ரமேஸ்ராம் மிஸ்ரா உத்தரவிட்டார். நேற்று அவர் தேவகோட்டையில் பொறுப்பேற்றார்.மானாமதுரை சப் டிவிஷன் டி.எஸ்.பி.,யாக இருந்த கண்ணன், அருப்புக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பின், இங்கு டி.எஸ்.பி., பணியிடம் நிரப்பபடவில்லை. திருநெல்வேலி தனிப்பிரிவு (ஐ.எஸ்) உதவி கமிஷனராக இருந்த எஸ்.லயோலா இக்னேஷியஸ், மானாமதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவரும் நேற்று பொறுப்பேற்றார்.

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

வாலிபரை கொல்ல முயற்சி மூவருக்கு 3 ஆண்டு ஜெயில்


தேவகோட்டை வள்ளியப்பச் செட்டியார் ஊரணி அருகே குடியிருப்பவர் செல்லமணி. கடந்த 2001 ஜூன் 23 ந்தேதி இரவு இவரது மகன் புரோஸ்கான் மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். இதே ஊரைச் சேர்ந்த அசோக், கண்ணன், விஜயன் மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்து புரோஸ்கானை அழைத்துச் சென்று ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.பலத்த காயங்களுடன் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.போலீசார் அசோக்,கண்ணன், விஜயன் மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த உதவி செசன்ஸ் நீதிபதி தனியரசு மூவருக்கும் தலா மூன்று வருடம் ஜெயில் தண்டனையும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »