அரசு பஸ் ஜப்தி


தேவகோட்டை : கல்லல் அருகே மேலமகாணத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோப்பெருந்தேவி. சில வருடங்களுக்கு முன் தேவகோட்டை ரஸ்தா அருகே வரும் போது அரசு பஸ் மோதியதில் இறந்து போனார். ராமசாமியும் அவரது மகனும் இழப்பீடு கேட்டு தேவகோட்டை சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2009 ஜன. 12 ந்தேதி கோப்பெருந்தேவி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 500 இழப்பீடு வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். உத்தரவிட்டப்படி வழங்கபடவில்லை. இழப்பீடுக்காக ஏற்கனவே ஒரு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. போக்குவரத்து கிளை அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து பஸ் விடுவிக்கப்பட்டது. உறுதி மொழிப்படியும் இழப்பீடு வழங்காததால் இழப்பீடு வட்டியுடன் சேர்ந்து ரூ. 3 லட்சத்து 32 ஆயிரத்து 976 வழங்க உத்தரவிடக்கோரியும், இல்லையேல் அரசு பஸ்சை ஜப்தி செய்து வசூல் செய்து தரக்கோரி கோர்ட்டில் மீண்டும் மனு செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி தனியரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

Advertisements