தேவகோட்டை அருகே தென்னீர்வயலில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை


தேவகோட்டை அருகே வீட்டுகதவை உடைத்து நகை-பணத்தை கொள் ளையடித்தவர் களையும், பள்ளியில் கம்ப்yuட்டர் திருடிய ஆசாமிகளையும் போலீசார் தேடி வருகின் றனர்.

நகைபணம் கொள்ளை

தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிரா மத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 65). இவரது கணவர் இறந்து விட்டார். மகன்கள் வெளியூரில் வசித்து வருகின் றனர். சம்பவத்தன்று காந்திமதி வீட்டை பூட்டிவிட்டு, 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார்.

வேலை முடிந்து திரும்ப வீட்டுக்கு வந்த போது, வீட் டின் பின்பக்க கதவு உடைக் கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.13ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காண வில்லை. யாரோ மர்ம ஆசா மிகள் அவற்றை திருடி சென்று விட்டனர்.

பள்ளியில் திருட்டு

தேவகோட்டையை அடுத்த புளியாலில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி யில் பள்ளி அலுவலக பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கம்ப்யூட்டரை மர்ம ஆசாமி கள் திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.50ஆயிரம் ஆகும். 2 திருட்டு வழக்குகள் குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முத்துவேல் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட ஆசாமிகளை தேடி வருகிறார்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு


தேவகோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.கவுன்சிலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவரும், தேவகோட்டை யூனியன் அ.தி.மு.க.வுன்சிலருமான தென்னீர்வயல் கே.ஆர்.பெரியண்ணன் அம்பலம் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தேவகோட்டை வளர்ந்து வரும் நகரம் ஆகும். தேவகோட்டையை சுற்றி ஏராள மான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தேவகோட்டை பஸ்நிலையத்தில் இறங்கி தான் தமது சொந்த வேலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த பஸ் நிலையம் திருச்சி- ராமேசுவரம் சாலையில் அமைந்துள்ளதால் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பஸ் நிலையம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பூக்கடைகள் மற் றும் தின்பண்டகடைகள் வைத்து மறைத்துவிடுவதால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிபடும் நிலை உள்ளது.

கோரிக்கை

எனவே பஸ் பயணிகளுக்கு உரிய நிழற்குடை அமைத்து, பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கி ரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

தென்னீர்வயல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அடித்து கொலை


தேவகோட்டை அருகே உள்ள தென்னீர் வயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன்கள் இலங்கேஸ்வரன் (வயது 46), ராமன் என்ற கருணாநிதி (37). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இலங்கேஸ்வரன் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு வந்து இருந்தார். சொத்து தொடர்பாக அண்ணன்-தம்பி இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து இருந்தனர். ராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இலங்கேஸ்வரனுக்கு திருமணம் ஆகி விஜய லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.நேற்றுமுன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால் இவர்கள் வீடுகளில் இருட்டாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ராமன் முன்விரோதத்தால் அரிவாளை எடுத்து அண்ணன் இலங்கேஸ்வரனை வெட்ட பாய்ந்தார்.

இதை பார்த்த இலங்கேஸ்வரன் நகர்ந்து கொண்டு, அருகே கிடந்த கட்டையை எடுத்து ராமனின் தலையில் ஒங்கி அடித்தார். இதில் ராமன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து இலங்கேஸ்வரனை கைது செய்தார்.

ராமனின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தேவ கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவைமாவட்டத்தை கலக்கிய கபாலி என்ற ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்டார். அந்த கொலைவழக்கில் ராமன் என்ற கருணாநிதி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »