தேவகோட்டை பகுதியில் கோவில் திருவிழா: மாட்டு வண்டி பந்தயம்


திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் முனிநாதன் கோவில் 28-ம் ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ஏரியூர்-மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக மொத்தம் 51 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலில் நடந்த பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வண்ணாம்பாரைப்பட்டி காமேஸ்வரன் மற்றும் நகரம்பட்டி வைத்தியா வண்டியும், இரண்டாம் பரிசை நத்தம் விளாம்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், மூன்றாம் பரிசை அ.வண்ணாளப்பட்டி பூஞ்சோலை ஜெயக்கண்ணன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை தேவராம்பூர் ராமநாதன் வண்டியும், இராண்டாம் பரிசை ஏரியூர் ஆட்டோ ராஜா வண்டியும், மூன்றாவது பரிசை குண்டேந்தல்பட்டி தவராணி வண்டியும் பெற்றது.

மூன்றாவதாக நடைபெற்ற சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும், இரண்டாவது பரிசை ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் வண்டியும், மூன்றாவது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும் பெற்றது.

கடைசியாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை மாம்பட்டி பாரிவள்ளல் வண்டியும், இரண்டாவது பரிசை செல்வேந்திரன் வண்டியும், மூன்றாவது பரிசை அலங்காநல்லூர் புதுப்பட்டி ராதா வண்டியும் பெற்றன.

இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோட்டூர்-வேலாயுதபட்டிணம் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 வண்டிகள் பங்கேற்று பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடந்த பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை தேவகோட்டை சோமசுந்தரம் வண்டியும், இரண்டாவது பரிசை ஆட்டூர் ராமநாதன் சேர்வை வண்டியும், மூன்றாவது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் உடப்பன்பட்டி சின்னையா அம்பலம் வண்டி முதல் பரிசையும், கல்லல் மார்க்கண்டன் வண்டி இரண்டாவது பரிசையும், கல்லூரணி காவேரி கருப்பையா பாலாஜி வண்டி மூன்றாவது பரிசையும் பெற்றன.

Advertisements

சிறுமருதூர் ஸ்ரீகருப்பர் காளியம்மன் கோயில் திருவிழா!


தேவகோட்டை : தேவகோட்டை சிறுமருதூர் ஸ்ரீகருப்பர் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அழகுவேலு பாபு, கண்டதேவி ஊராட்சி தலைவர் கேசவமணி, கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு, சிறுமருதூர் கிராம தலைவர் கருப்பையா, டாக்டர்கள் பெரியசாமி, ராமச்சந்திரன், பொறியாளர்கள் பாலசுப்பிமணியன், தட்சிணாமூர்த்தி, மள்ளர் கழக மாவட்ட அமைப்பாளர் ரவி, பங்கேற்றனர்.