தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல்


தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல்: கணவன்-மனைவி மீது வழக்கு

தேவகோட்டை கீழசெம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் டிராக்டரில் மணல், கற்கள் லோடு அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் காரைக்குடியை சேர்ந்த ராமநாதன் என்பவர் வீட்டிற்கு மணல் சப்ளை செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று ரவிச்சந்திரன் கள்ளல் என்ற இடத்தில் டிராக்டர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமநாதன் அவரது மனைவி ஜோதி ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். 2 பேரும் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், ராமநாதன் அவரது மனைவி ஜோதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements