தேவகோட்டை நகர்மன்றக் கூட்டம்


தேவகோட்டை நகர்மன்றக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வரானதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியவுடன் உறுப்பினர் செல்லமுத்து பேசும்போது மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரினார். இதை ஏற்ற தலைவர் தீர்மானம் நிறைவேறுவதாக அறிவித்தார்.

துணைத்தலைவர் பாலமுருகன்: நகரில் உள்ள பன்றித் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டுமென கோரினார். நடவடிக்கை எடுப்பதாக தலைவர் அறிவித்தார்.

உறுப்பினர் கேசவன்: நகரிலுள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரியவில்லை. சுகாதார சீர்கேடு அதிகம் உள்ளது எனவும் புகார் தெரிவித்தார்.

உறுப்பினர் செல்லமுத்து: ராமநகரிலுள்ள பழைய விருந்தினர் இல்லம் பாழடைந்து இருப்பதால் அதில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவித்தார். இந்த பழமையான கட்டடத்தை இடித்துவிட்டு உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் அவர் கூறினார். பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »