சிவகங்கை புதிய கலெக்டர் பதவியேற்பு


சிவகங்கை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த வி சம்பத் கடந்த மாதம் சென்னை வெடிபொருள் நிறுவன மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் அலுவலக கண்காணிப்பு பிரிவு துணை செயலாளராக பணியாற்றிய வி.ராஜாராம்(41) சிவகங்கை மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றார்.”” அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் பாடுபடுவேன்,” என்றார். இவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவியும், நிரஞ்சன் தேவநாதன் என்ற மகனும் (7) பிரதீபா அமிர்தவர்தினி (6) என்ற மகளும் உள்ளனர்.

Advertisements
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தேவகோட்டை: சமத்துவபுரம் திறப்பு


தேவகோட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் பெரிய கருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் காரைக்குடி நகராட்சிக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் திறந்து வைத்து பார்வையிட்டார்
.
தேவகோட்டை அருகே உள்ள நல்லான்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.