சிலம்பணி ஊரணியில் செத்து மிதந்த மீன்கள்


தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் அருகே உள்ள ஊரணியில் பாலித்தீன், உட்பட கழிவுகளின் நீர்தேக்கமாக காணப்படுகிறது.நேற்று காலை பெரிய பெரிய மீன்கள் செத்து மிதந்தன. ஊரணியிலுள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

நகராட்சி தலைவி சுமித்ரா கூறியதாவது: திடீரென மீன்கள் இறந்து இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.விஷம் கலந்துள்ளதா, செப்டிங் டேங்க் கழிவுகளை இரவில் யாரும் கலந்து விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீரை சோதனைக்கு மதுரைக்கு அனுப்பியுள்ளோம், என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »

முதியவர் பலி


தேவகோட்டை சாமியாடி பெரியகருப்பன் தெருவைச் சேர்ந்த ராமநாதன்,80. நகைக் கடை நடத்தி வருகிறார். இரு நாட்களாக அவரை காணாமல் குடும்பத்தினர் தேடினர். நேற்று மாலை சிலம்பணி ஊருணியில் பிணமாக மிதந்தார். குளிக்க வந்தவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என அவரது பேரன் நந்தா டவுன் போலீசில் புகார் செய்தார்.