தேவகோட்டையில் வாக்காளர்களுக்கு சித.பழனிச்சாமி நன்றி


தேவகோட்டையில் வாக்காளர்களுக்கு காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சோழன் சித.பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார்.

ராமநகரில் தனது பயணத்தைத் துவங்கிய அவர் கடை வீதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் திறந்த ஜீப் மூலம் மக்களிடம் நன்றி தெரிவித்து பேசும்போது தேர்தலில் அ.தி.மு.க. கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.

அனைத்தும் காரைக்குடி தொகுதியில் உள்ள அனைவருக்கும் முழுமையாக கிடைக்குமாறு செய்வேன் என்றார்.

அவருடன் காரைக்குடி தொகுதி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சொர்ணலிங்கம், கற்பகம் இளங்கோ, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் தேர்போகிபாண்டி, வழக்கறிஞர் ராமநாதன், நகரச் செயலாளர் எஸ்.வி.ராமச்சந்திரன், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி காசிலிங்கம், காட்டுராஜா ஜெசதீசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்லமுத்து, சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »