காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அண்ணா நகர் ஜீவாநகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு சுமந்து சிலம்பணி பிள்ளையார் கோவில் முன்பிருந்து புறப்பட்டு, தியாகிகள் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், காளிம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.

Advertisements