மரணம் அடைந்த பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி உடல் தகனம் மாமல்லபுரத்தில் நடந்தது


கணபதி ஸ்தபதி

கணபதி ஸ்தபதி

பிரபல சிற்பி எழுவன்கோட்டை வி.கணபதி ஸ்தபதி நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், பூம்புகார் கண்ணகி கோட்டம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் ஆவார். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.

மறைந்த கணபதி ஸ்தபதியின் உடல் நேற்று மாமல்லபுரம் வடகடம்பாடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், நக்கீரன் கோபால், முத்தையா ஸ்தபதி, விஸ்வ ஜனசக்தி கட்சி தலைவர் பொன்.பரமகுரு உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சிற்பிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கணபதி ஸ்தபதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாமல்லபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

எழுவங்கோட்டை ஆற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு


தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை தேர்தலுக்கு பின், புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசே மணல் குவாரியை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் நேற்று “பொக்லைன்’ இயந்திரம் மூலம் மணல் எடுக்கும் முயற்சி நடந்தது. அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் மணல் அள்ளியதால், குடிநீர் ஆதாரம் பாதிக்கும் எனக்கூறி, எழுவங்கோட்டை, போரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள், மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு சென்ற தாலுகா இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். ஊராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், அணைக்கட்டில் மணல் அள்ள தடை இருந்தும், மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆற்றில் இரண்டு ஆழ்குழாய் கிணறு போட்டுள்ளோம். ஆற்றை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில், மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.

தேவகோட்டை ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் கூறுகையில்,”” எழுவங்கோட்டை மணல் குவாரியை அரசே ஏற்று நடத்துகிறது. தனியாக யாருக்கும் குத்தகை தரவில்லை. மணல் தட்டுப்பாட்டை போக்க, நேற்று முன்தினம் முதல் இங்கு, அரசு மணல் குவாரி துவக்கியுள்ளது. இதில் தனியார் தலையீடு இல்லை. இது குறித்து அக்கிராம மக்களிடம் எடுத்து கூற உள்ளேன்,” என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »