மணல் லாரி செல்வதில் மோதல்: 5 பேர் கைது


தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாறில் அரசு மணல் குவாரி உள்ளது. மணல் அள்ளிச் செல்லும் வெளியூர் லாரி, டிராக்டர்கள் எழுவங்கோட்டை வழியே செல்லக்கூடாது என அதிகாரிகள், கிராமத்தினர் முன்னிலையில் பேசிமுடிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை வெங்களூர் அருகே கூனவயலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் டிராக்டரில் அந்த வழியாக மணல் ஏற்றிச் சென்றுள்ளார். எழுவங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் தனது நண்பர்களான தச்சக்குடி கார்த்திகேயன் (23), பாவனக்கோட்டை ஸ்டாலின் (26), உஞ்சனை மணி(22), காரைக்குடி தினகரன் (22) ஆகியோருடன் எழுவங்கோட்டைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அந்த வழியாக வந்த நடுவிக்கோட்டையைச் சேர்ந்த பெரியசாமி( 38) யையும் தாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் ஐந்து பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தாலுகா எஸ்.ஐ. கருப்பையா 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். காயமடைந்த பெரியசாமி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisements

தேவகோட்டை அருகே ஐவர் நினைவிடத்தில் 32-வது நினைவஞ்சலி


தேவகோட்டை அருகே உள்ளது உஞ்சனை கிராமம். இங்குள்ள கழனிபெரிய அய்யனார் கோவிலில் கடந்த 28.6.1979-ம் ஆண்டு புரவி எடுப்பதையொட்டி நடந்த பிரச்சினையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 32-வது ஆண்டு நினைவை யொட்டி நேற்று மாலை உஞ்சனை கிராமத்தில் இருந்து மலர் வளையம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஐவர் சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் பாலு, உடை யப்பன், வீரமாகாளி, ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆறாவயல் விலக்கு சாலையில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் புதிய தமிழகம் சார்பில் கஜேந்திரன், சுப்பிரமணியன், வேலுமணி, மனித உரிமை கட்டமைப்பு சார்பில் தமிழ் அரிமா, வக்கீல் கணேசன், மள்ளர்நாடு அமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் கடிகை ரவி, அழகர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மணிமுத்து, சந்திரன், கழனியப்பன், துரை மாணிக்கம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பாலுச்சாமி, திக்காவயல் செந்தில், உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம் சார்பில் கருப்பையா, ஸ்டீபன், தியாகி இமானுவேல் பேரவை ரஞ்சித், தேவேந்திரர் குல கூட்டமைப்பு ராக்கமுத்து, சிம்சன், வக்கில் கருணாநிதி, நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராம நாதபுரம் சந்தீப் பாட்டில், கூடுதல் போலீஸ் சூப் பிரண்டு கண்ணன், துணை போலீசார் சூப்பிரண்டுகள் காரைக்குடி மங்களேஸ் வரன், தேவகோட்டை கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

விபத்தில் மாணவர் பலி


தேவகோட்டை : காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(17). புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சுப்புராஜூவுடன் டி.என். 63 பி.4734 எண்ணுள்ள டி.வி.எஸ். ஸ்போர்ட் பைக்கில் உஞ்சனையில் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார்.

திரும்பி வரும் போது உஞ்சனை மாத்தூர் ரோட்டில் பைக் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்தனர். சுப்புராஜூ சம்பவ இடத்தில் பலியானார். அருண் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறாவயல் எஸ்.ஐ. அர்ச்சுணன் பொறியியல் துறை மாணவர் அருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.