தேவகோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரைவண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்

மேலச்செம்பொன்மாரி, ஆறாவயல், பேராட்டுக்கோட்டை, பொன்னி வயல் நாட்டார்கள் இணைந்து மாட்டு வண்டி பந்தயம் நடத்தினர். மாட்டு வண்டி பந்தயம் பெரியமாடு, நடுமாடு,சின்னமாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவாகவும், குதிரை பந்தயம் பெரிய குதிரை, சின்னகுதிரை என 2 பிரிவாகவும் நடைபெற்றது. போட்டிகளில் 50 வண்டிகள் கலந்து கொண்டன.

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடத்தை அடம்பூர் தங்கராஜா வண்டி யும், 2ம் இடத்தை அ.வள்ளாளபட்டி பூஞ்சோலை வண்டியும், 3ம்இடத்தை புதுத் தாமரைப்பட்டி சேதுராமன் வண்டியும் பெற்றது. நடுமாடு பந்தயத்தில் முதல் இடத்தை அவனியாபுரம் முருகன் வண் டியும், 2ம் இடத்தை கொட்டகுடி கண்ணன் வண்டியும், 3ம் இடத்தை மறவனேந்தல் துஸ்டக்கருப்பர் வண்டியும் பெற்றது.

சின்னமாடு பந்தயத்தில் முதலிடத்தை சிங்கத்திருமுருகப்பட்டி செல்லத்துரை வண்டியும், 2ம் இடத்தை நாகப்பன் பட்டி அஜித்குமார் வண்டியும், 3ம் இடத்தை பரளி மணி வண்டியும் பெற்றது. பூஞ்சிட்டு பந்தயதில் முதலிடத்தை மேலூர் புவனேஸ்வரி வண்டியும், 2ம் இடத்தை மணச்சை வெற்றிவிநாயகர் வண்டியும், 3ம் இடத்தை வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அஜ்மல்கான் வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

இதேபோல் பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் பேராட்டுக் கோட்டை மாயழகு வண்டியும், 2ம் இடத்தை தீர்த்தப்பூர் சிவபிரகாசம் வண்டியும், சின்னகுதிரை வண்டி பந்தயத்தில் முதலிடத்தை காளையார் கோவில் மேப்பல் சக்தி வண்டியும், 2ம் இடத்தை தீருதப்பூர் சிவபிரகாசம் வண்டியும் பெற்றது.

Advertisements

லஞ்சம் வாங்கிய ஆறாவயல் எஸ்.ஐ., கைது


போலீஸ் நிலைய ஜாமீனில் விட லஞ்சம் கேட்ட எஸ்.ஐ.,யைபோலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தானுச்சாஊரணியிலுள்ள கணேசன் செட்டியாருக்கு சொந்தமான இடத்திலுள்ள கருவேலமரங்களை அதே ஊரைச் சேர்ந்த சரவணன், ஐயப்பன் ஆகியோர் வெட்டினர். அதே ஊரைச் சேர்ந்த காசி இதனை தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காசி காயமடைந்தார். இரண்டு தரப்பினரும் தந்த புகாரின் பேரில் ஆறாவயல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட சரவணன், ஐயப்பன் இருவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் நேற்று முன்தினம் வெளியே வந்து விட்டனர். காயமடைந்த காசி நேற்று ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர் மீது 294 பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காசியை காவல் நிலைய ஜாமீனில் விடுவதற்காக இவரது மகன் பாண்டியிடம் ஆறாவயல் எஸ்.ஐ.,அர்ஜூனன் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இது குறித்து பாண்டி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அருளானந்தத்திடம் புகார் செய்தார்.நேற்றிரவு 8 மணிக்கு பாண்டி,எஸ்.ஐ., அர்ஜூனிடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். .

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தேவகோட்டை அருகே ஐவர் நினைவிடத்தில் 32-வது நினைவஞ்சலி


தேவகோட்டை அருகே உள்ளது உஞ்சனை கிராமம். இங்குள்ள கழனிபெரிய அய்யனார் கோவிலில் கடந்த 28.6.1979-ம் ஆண்டு புரவி எடுப்பதையொட்டி நடந்த பிரச்சினையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 32-வது ஆண்டு நினைவை யொட்டி நேற்று மாலை உஞ்சனை கிராமத்தில் இருந்து மலர் வளையம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஐவர் சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் பாலு, உடை யப்பன், வீரமாகாளி, ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆறாவயல் விலக்கு சாலையில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் புதிய தமிழகம் சார்பில் கஜேந்திரன், சுப்பிரமணியன், வேலுமணி, மனித உரிமை கட்டமைப்பு சார்பில் தமிழ் அரிமா, வக்கீல் கணேசன், மள்ளர்நாடு அமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் கடிகை ரவி, அழகர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மணிமுத்து, சந்திரன், கழனியப்பன், துரை மாணிக்கம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பாலுச்சாமி, திக்காவயல் செந்தில், உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம் சார்பில் கருப்பையா, ஸ்டீபன், தியாகி இமானுவேல் பேரவை ரஞ்சித், தேவேந்திரர் குல கூட்டமைப்பு ராக்கமுத்து, சிம்சன், வக்கில் கருணாநிதி, நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராம நாதபுரம் சந்தீப் பாட்டில், கூடுதல் போலீஸ் சூப் பிரண்டு கண்ணன், துணை போலீசார் சூப்பிரண்டுகள் காரைக்குடி மங்களேஸ் வரன், தேவகோட்டை கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

விபத்தில் மாணவர் பலி


தேவகோட்டை : காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(17). புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சுப்புராஜூவுடன் டி.என். 63 பி.4734 எண்ணுள்ள டி.வி.எஸ். ஸ்போர்ட் பைக்கில் உஞ்சனையில் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார்.

திரும்பி வரும் போது உஞ்சனை மாத்தூர் ரோட்டில் பைக் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்தனர். சுப்புராஜூ சம்பவ இடத்தில் பலியானார். அருண் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறாவயல் எஸ்.ஐ. அர்ச்சுணன் பொறியியல் துறை மாணவர் அருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.