ஆக்கிரமிப்பு அகற்றும்போது அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. தேவகோட்டை நகரசபை கூட்டத்தில் விவாதம்


தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது அரசியல் தலையிடு இருக்க கூடாது என்று நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

தேவகோட்டை நகரசபை அவசர கூட்டம் அதன் தலை வர் கே.ஆர்.சுமித்ரா ரவிக் குமார் தலைமையில் நடை பெற்றது. கமிஷனர் இசக்கி யப்பன், என்ஜினீயர் செல்வ ராஜ், துணைத்தலைவர் சுந்தர் லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ரமேஷ் (சுயே):- தேவ கோட்டை பஸ்நிலையத்தில் 30 கடைகளை வாடகைக்கு விட்டு 300 கடைகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. இத னால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

போஸ் (அ.தி.மு.க.):-
பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுத்தம் செய்யப் படாததால் பஸ்நிலையமே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல தொற்றுநோய் ஏற்படுகி றது. எனவே அதை இடித்து விடுங் கள் அல்லது பராமரிப்பு செய்யுங்கள்.

அரசியல் தலையிடு கூடாது

கமிஷனர்:- பஸ்நிலைய ஆக் கிரமிப்புகள் விரைவில் அகற் றப்படும். இதுபோன்ற ஆக்கி ரமிப்புகள் அகற்றப்படும் போது, கவுன்சிலர்கள் யாரும் குறுக்கிடகூடாது. 27 வார்டு களிலும் உள்ள ஆக்கிரமிப்பு களை ஒருவாரகாலத்திற்குள் போலீஸ் உதவியுடன் நான் அகற்றிவிடுகிறேன். இதில் எந்த அரசியல் தலையிடும் இருக்க கூடாது. அதற்கு அனைத்து கவுன்சிலர்களும் தயாராக இருக்கிறீர்களா?.

இளங்கோ(தி.மு.க.):– எனது வார்டில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற கூடாது.

சுப்பிரமணியன்(சுயே):- தேவகோட்டையில் தெரு விளக்குகள் சரியாக எரிவ தில்லை. ராம்நகரில் உள்ள மிகப்பெரிய பூங்கா இருளில் மூழ்கியுள்ளது.

என்ஜினீயர்:– பைமாஸ் விளக்குகளை அதை நிறுவி யவர்களே பராமரிக்க வேண் டும் என்பதால் ஒரு மாத காலத்திற்குள் அதை சரி செய்துவிடுகிறோம்.

குடிநீர்பிரச்சினை

ரமேஷ்:- தேவகோட்டை யில் குடிநீர்பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறி வரு கிறது.

என்ஜினீயர்:- மின்தடை தான் அதற்கு காரணம்.

பெரிபாலா(தி.மு.க.):- நகர் மன்ற தலைவர் மற்றும் அதி காரிகள் இணைந்து மின்தடை இருப்பதால் தண்ணீரை சிக் கனப்படுத்துங்கள் என்று அறி விப்பு செய்ய வேண்டும்.

பெரியாள்(அ.தி.முக.):- வாரசந்தையில் உள்ள ஓவர் டேங்கில் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக குடிநீர் வருகிறது.

தலைவர்:-எப்போதில் இருந்து வருகிறது.

பெரியாள்:- ஒருவாரமாக வருகிறது.

தலைவர்:- நான் தினமும் அலுவலகத் திற்கு வருகிறேன். நீங்கள் என்னிடம் அப்போது கூறியிருந்தால் அன்றே நடவ டிக்கை எடுக்கப்பட்டு இருக் கும். இனிமேல் அந்தந்த வார்டு களில் உள்ள பிரச்சினைகளை தினமும் எனது கவனத்துக்கு கொண்டுவந்தால் அவ்வப் போது தீர்க்கப்பட்டு விடும். அதை விடுத்து மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தில் வந்து குறைசொல்வதை நிறுத்தி கொள்ளவேண்டும். இனி கவுன்சிலர்கள் கூட்டங்களில் பேசும்போது, தலைவரை தவிர அனைவரும் எழுந்து நின்று தான் பேச வேண்டும்.

துணைத்தலைவர்:- குறைகளே சொல்லக் கூடாது.

தலைவர்:-கவுன்சிலர்கள் கூறும்குறைகளை நாங்கள் செய்யவில்லை என்றால் இங்கு வந்து கூறுங்கள். இங்கு பேசப்படும் குறைகளை குறித்து வைத்துகொண்டு அவைகளை உடனடியாக அதிகாரிகள் தீர்க்கவேண்டும். அடுத்த கூட்டம் வரும்வரை காத்திருக்க கூடாது.

நாய்களுக்கு அடையாளம்

வீரப்பன் (அ.தி.மு.க):- தியா கிகள் ரோடு, பஸ்நிலைய வீதி, இ.பி.ரோடு ஆகிய வீதி களில் நகராட்சியே கால் வாய் கட்டுகிறோம் என்கிற பெயரில் ஆக்கிரமித்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

பாலு(சுயே):-நாய்களை கருத்தடை செய்யும்போது, அவைகளுக்கு ஏதாவது அடை யாளம் இடப்பட வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

Advertisements
அரசியல், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

தேவகோட்டையில் ரோடுகள் ஆக்கிரமிப்பு


தேவகோட்டை : தேவகோட்டையில் நாளுக்கு நாள் ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. நடைபாதையில் கடைகள் அமைப்பதாலும், அதன் அருகே வாகனங்களை நிறுத்துவதாலும் மக்கள் நடுரோட்டில் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் வங்கிகள் ஒரே வீதியில் இருப்பதாலும் அனைத்து வாகனங்களும் ரோட்டிலேயே நிறுத்தப்படுகிறது. தியாகிகள் பூங்கா தென்புறம் ஒரு வழிப்பாதையாக இருந்தது. தற்போது அந்த நடை முறை கடைபிடிக்காததால் அவ்வழியும் நெருக்கடியாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ்கள் அனைத்தும் பஸ்ஸ்டாண்டிற்குள் சென்று வர போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்தார். தற்போது பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்வதில்லை. வெளிப்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி,இறக்கி செல்கின்றனர். நகராட்சியினரும்,போலீசாரும் ஒருங்கிணைத்து செயல்பட்டு ரோட்டோர ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும்.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »