தாசில்தார் அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்


தேவகோட்டையில் ஏப்.,21 அன்று காஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

அன்று காலை 11 மணிக்கு தாசில்தார் அலுவலகத்தில் துவங்கும், கூட்டத்தில் சிலிண்டர் பயன்படுத்துவோர் தவறாமல் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம், என, டி.ஆர். ஓ., தனபால் தெரிவித்தார்.

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தேவகோட்டை அருகே ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் மோசடி: வாலிபருக்கு வலைவீச்சு


தேவகோட்டை தானிச்சா ஊரணியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் காசிலிங்கம் (வயது 36). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தனது தம்பி கார்த்திகேயனின் பாஸ்போர்ட்டில் ஆள் மாறாட்டம் செய்து தனது புகைப்படத்தை ஒட்டியிருந்தாராம்.

இந்நிலையில் காசிலிங்கம் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது காசிலிங்கம் பாஸ்போர்ட்டில் ஆள்மாறாட்டம் செய்து புகைப்படம் ஒட்டியிருந் ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து மதுரை பாஸ்போர்ட் அதிகாரிகள், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம், காசிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க ஆராவயல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ஆராவயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான காசிலிங்கத்தை வலைவீசி தேடி வருகிறார்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்


தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

யூனியன் கூட்டம்

தேவகோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.செந்தில்நாதன் தலை மையில் நடைபெற்றது. கமிஷனர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி சுந்தர் ராஜன், துணைத் தலை வர் சவுந்தரம் பிர்லா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

கூட்டத்தில் 15 தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுநிதியில் இருந்து ரூ.ஒருகோடியே 15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு:-

பெரியண்ணன் அம்பலம் (அ.தி.மு.க.)- போரிவயல் பாலம் தயார் நிலையில் உள்ளதால் தேவகோட்டை- புலியடிதம்பம் பஸ்சை இயக்க வேண்டும். ஈகரையில் பெரிய பாலம் அமைக்க வேண்டும். தென்னீர் வயலில் திருமண மண்டபம் கட்ட வேண்டும். அங்கு புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டவேண்டும். தேவகோட்டை ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டியவர் களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் முதல்வர் திட்டம் என்பதால் கால தாமதம் செய்யாமல் பணம் பட்டுவாடா செய்யவேண் டும்.

முத்துகுமரேசன் (அ.தி. மு.க.):- கொங்கன்பட்டியில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. பருத்தியூர் மற்றும் சிவனூரில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலை யில் உள்ளதால் மனித உயிர் களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். செழுகையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கவேண்டும்.

சிமெண்டுசாலை

டேவிட் (தே.மு.தி.க.):- கிளியூர் ஊரணி மேல்கரையில் சிமெண்டு சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ராயர்பட்டினத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். வாயிலானேந்தல் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

ஸ்டெல்லா ஜோசப் (அ.தி.மு.க.):- புளியால் பஞ்சாயத் தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்சிராணி (இந்திய கம் யூனிஸ்டு):- விளாங்காட்டூரில் புதிய ரேஷன்கடை கட்ட வேண்டும்.

திருநாவுக்கரசு (அ.தி.மு.க.):- இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்ட பயனா ளிகள் தேர்ந்தெடுக்கும் போது, கவுன்சிலர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மராமத்து


திலகபாரதி (அ.தி.மு.க.):-
திராணியில் இருந்து தேவகோட்டை, சருகனி, புலியடி தம்பம் வழியாக பஸ் விட வேண்டும். திராணி மற்றும் வெள்ளி கட்டியில் திருமண மண்டபம் கட்டவேண்டும். உறுதிகோட்டையில் தண்ணீர் பற்றாக்குறையாகஉள்ளது. அதை போக்குவதற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

லலிதா (அ.தி.மு.க.):– கொடிக்குளம் கண்மாயில் கொடி பூவரசை அகற்றி மண் மராமத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தேவகோட்டை பகுதியில் கோவில் திருவிழா: மாட்டு வண்டி பந்தயம்


திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் முனிநாதன் கோவில் 28-ம் ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ஏரியூர்-மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக மொத்தம் 51 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலில் நடந்த பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வண்ணாம்பாரைப்பட்டி காமேஸ்வரன் மற்றும் நகரம்பட்டி வைத்தியா வண்டியும், இரண்டாம் பரிசை நத்தம் விளாம்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், மூன்றாம் பரிசை அ.வண்ணாளப்பட்டி பூஞ்சோலை ஜெயக்கண்ணன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை தேவராம்பூர் ராமநாதன் வண்டியும், இராண்டாம் பரிசை ஏரியூர் ஆட்டோ ராஜா வண்டியும், மூன்றாவது பரிசை குண்டேந்தல்பட்டி தவராணி வண்டியும் பெற்றது.

மூன்றாவதாக நடைபெற்ற சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும், இரண்டாவது பரிசை ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் வண்டியும், மூன்றாவது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும் பெற்றது.

கடைசியாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை மாம்பட்டி பாரிவள்ளல் வண்டியும், இரண்டாவது பரிசை செல்வேந்திரன் வண்டியும், மூன்றாவது பரிசை அலங்காநல்லூர் புதுப்பட்டி ராதா வண்டியும் பெற்றன.

இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோட்டூர்-வேலாயுதபட்டிணம் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 வண்டிகள் பங்கேற்று பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடந்த பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை தேவகோட்டை சோமசுந்தரம் வண்டியும், இரண்டாவது பரிசை ஆட்டூர் ராமநாதன் சேர்வை வண்டியும், மூன்றாவது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் உடப்பன்பட்டி சின்னையா அம்பலம் வண்டி முதல் பரிசையும், கல்லல் மார்க்கண்டன் வண்டி இரண்டாவது பரிசையும், கல்லூரணி காவேரி கருப்பையா பாலாஜி வண்டி மூன்றாவது பரிசையும் பெற்றன.

யாதவா நர்சரி பள்ளி ஆண்டு விழா


தேவகோட்டை யாதவா நர்சரி மற்றும் துவக்கப் பள்ளியின் 31-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு யாதவா சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை முருகேஸ்வரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிவகங்கை மாவட்டக் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

மின் வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை வாழ்த்தினார். சங்கச் செயலாளர் கோட்டை, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தென்னீர்வயல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அடித்து கொலை


தேவகோட்டை அருகே உள்ள தென்னீர் வயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன்கள் இலங்கேஸ்வரன் (வயது 46), ராமன் என்ற கருணாநிதி (37). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இலங்கேஸ்வரன் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு வந்து இருந்தார். சொத்து தொடர்பாக அண்ணன்-தம்பி இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து இருந்தனர். ராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இலங்கேஸ்வரனுக்கு திருமணம் ஆகி விஜய லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.நேற்றுமுன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால் இவர்கள் வீடுகளில் இருட்டாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ராமன் முன்விரோதத்தால் அரிவாளை எடுத்து அண்ணன் இலங்கேஸ்வரனை வெட்ட பாய்ந்தார்.

இதை பார்த்த இலங்கேஸ்வரன் நகர்ந்து கொண்டு, அருகே கிடந்த கட்டையை எடுத்து ராமனின் தலையில் ஒங்கி அடித்தார். இதில் ராமன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து இலங்கேஸ்வரனை கைது செய்தார்.

ராமனின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தேவ கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவைமாவட்டத்தை கலக்கிய கபாலி என்ற ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்டார். அந்த கொலைவழக்கில் ராமன் என்ற கருணாநிதி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் காசநோயால் 338 பேர் இறந்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் காச நோயால் 338 பேர் இறந்துள்ளனர் என்று காசநோய் பிரிவு துணை இயக்குனர் விஜய் ஆனந்த் கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

உலக காசநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு ஊர் வலம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. ஊர் வலத்தை கலெக்டர் ராஜா ராமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரஞ்சனிதேவி, துணை இயக் குனர் விஜய் ஆனந்த், ஐ.ஆர்.சி.டி.எஸ்.தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ஜீவானந் தம், சாய் தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி எட்வர்ட் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மருத்து வமனை முன்பு முடிந்தது. பின்னர் காசநோய் பிரிவு துணை இயக்குனர் விஜய் ஆனந்த் கூறியதாவது:-

காசநோய் காற்றின் மூலமாக பரவும் ஒரு தொற்று நோய் ஆகும். தொற்று நோய்களில் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துவது காசநோய் தான். 7ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானவை இந்த நோய். கி.பி.ஆயிரத்து 500ல் இது தொற்றுநோய் என அறியப்பட்டது.

18 லட்சம்பேர் பாதிப்பு

1946ம் ஆண்டு இதற்கென தனிப் பிரிவு தொடங்கப்பட் டது. நோயின் தாக்கம் பற்றிய கணக்கெடுப்பு 1955ல் எடுக் கப்பட்டது. 1959ல் பெங்க ளூரில் தேசிய டிபி அமைப்பு உருவாக்கப்பட்டது. 1997ல் திருத்தி அமைக்கப்பட்ட காச நோய் கட்டுப்பாடு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியா வில் இந்த நோயால் ஒரு ஆண் டிற்கு 18 லட்சம் பேர் பாதிக் கப்படுகிறார்கள். இவர்களில் 4 லட்சம் பேர் மரணம் அடை கிறார்கள்.

உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்கு எடுப்பின்படி உலக காசநோயாளிகளில் 5ல் ஒரு வர் இந்தியர் ஆவார். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் புதிய நோயாளிகள் உருவாகிறார் கள். ஒவ்வொரும் நாளும் ஆயிரம் பேர் மரணம் அடை கிறார்கள். சிவகங்கை மாவட் டத்தில் திருத்தி அமைக்கப் பட்ட தேசிய காசநோய் திட் டம் கடந்த 2001ல் தொடங்கப் பட்டது.

இலவச மாத்திரைகள்

ஏறத்தாழ 5 லட்சம் மக் களுக்கு ஒரு பிரிவு என்ற கணக் கில் சிவகங்கை, காளையார் கோவில், நெற்குப்பை ஆகிய 3 இடங்களில் காசநோய் பிரிவு தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாவட் டத்தில் காசநோயால் 338 பேர் இறந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு மட்டும் 31 பேர் இறந்துள்ளனர். 2011ம் ஆண்டு மட்டும் இந்த மாவட்டத்தில் 1,235 காசநோயாளிகள் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 87.9 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

காசநோயாளிகளுக்கு வழங் கப்படும் டாட் சிகிச்சை மூலம் தரமான மாத்திரைகள் இலவ சமாக வழங்கப்படுகிறது. 6 முதல் 8 மாதங்கள் வரைக்கும் இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த நோய் தாக்கப் பட்டவர்களுக்கு உரிய மருந் துகள் சாப்பிடுகிறார் களா? என்பதை கண்காணிப்பதற் காக உறவினர்கள் அல்லது சுகாதார செவியலியர்கள் மூல மாக வழங்கப்படும். இவ் வாறு அவர் கூறினார்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »