தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்


சிவகங்கை,நவ.14- தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணி காலியிடத்துக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லக பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சமையலர் பணியிடம்

காரைக்குடி அரசினர் குழந் தைகள் இல்லத்தில் காலியாக உள்ள சமையலர் காலி பணி யிடத்துக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ள உத்தேச பதிவு மூப்பு விவரம் வருமாறு;-

இந்த பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இது பிற்படுத்தப் பட்ட முன்னுரிமை பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1.7.2010 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணி யிடத்துக்கு 2.4.1985 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இந்த தகுதி உடையவர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வருகிற வருகிற 18-ந் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

கிராம உதவியாளர்

இதே போல் தேவகோட்டை பகுதியில் காலியாக உள்ள வருவாய் கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணிகாலி யிடத்துக்கு பரிந்துரை செய் யப்பட உள்ளவர்களின் பதிவு மூப்பு விவரம் வருமாறு;-

காரை கிராமத்தில் உள்ள பணியிடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தபணியிடத்துக்கு பெரிய காரை, சின்னகாரை, தேந்தலை பிரியான், கொங்கிவயல், திருமரை, சாலைக்குடி, கற்படை, தீத்தான்வயல், கொட் டக்குடி, பாவனக்கோட்டை, பரம்பக்குடி ஆகிய கிராமங் களில்வசிப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். இதே போல்முப்பையூர் பணியிடமும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களில் முன்னுரிமை பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்துக்கு முப்பையூர், நடுவிக்கோட்டை, ராயர் பட்டிணம், கீழக் கோட்டை, கைலாசபுரம், காக் காச்சியேந்தல், குட்டையன் குடியிருப்பு, இடையர் குடியி ருப்பு, வாயுலானேந்தல், மே.காரைக்குடி, பொன்னகரை, வெட்டிவயல், பழுவன் காடு ஆகிய கிராமங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக் கலாம். தகுதி உடையவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, பள்ளி தகுதி சான்றி தழ் ஆகிய வைகளுடன் வருகிற 18-ந்தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் சம்பத் விடுத்துள்ள அறிக்கை யில்கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »