நெற்பயிரில் நோய் தாக்கம்


தேவகோட்டை ஒன்றியம் செலுகை, வாடிநன்னியூர், புதுக்குறிச்சி, செவ்வாய்பேட்டை, முப்பையூர் உள்ளிட்ட கிராமங்களில் நெல் விவசாயம் நடக்கிறது. இப்பகுதி நெற்பயிர்களில் புகையான் , இலைசுருட்டு புழு நோய், குலை நோய் தாக்கியுள்ளது. இந்நோய் தாக்கிய நெற்பயிர் இலைகளில் பச்சயம் குறைந்து வெளுப்பு நிறமாக இருக்கும். இந்நோய் தாக்கிய கிராமங்களில், விவசாயத்துறை உதவி இயக்குனர் சம்பத், ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பூச்சியை கட்டுபடுத்த ஏக்கருக்கு குளோரி பைரிபாஸ் அல்லது மானோகுரோட்டாபாஸ் 400 மி. நோயை கட்டுபடுத்த எடிபன்பாஸ் 500 மி.,யை 200 லிட்டர் தண்ணீரில் கலந்துதெளிக்கவும் என தெரிவித்தார்.

Advertisements
விவசாயம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பூக்கள் கருகின தமிழகத்தில் முந்திரி விளைச்சல் பாதிப்பு


தேவகோட்டை : வெயி லுக்கு பூக்கள் கருகியதால், தமிழகத்தில் முந்திரி விளை ச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இவ்வாண்டு முந்திரி விளைச்சல் பெரு மளவு குறைந்துள்ளது. சிவ கங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, தேவகோட்டை, காளையார்கோவில் உள் ளிட்ட பகுதிகளில் அரசு, தனியார் தோட்டங்களில் 15 ஆயிரம் எக்டேரில் முந்திரி சாகுபடி நடைபெறுகிறது.

கடும் வெயிலில் பூக்கள் கருகியதாலும், உரிய காலத் தில் பூக்காததாலும், மகரந்த சேர்க்கைக்கு தேவையான காற்று வீசாததாலும் முந்திரி விளைச்சல் குறைந்து விட் டது. கடந்த ஆண்டை விட தற்போது மகசூலில் 30 சத வீதம் வீழ்ச்சி அடைந்துள் ளது. இதனால் முந்திரி பயி ரிட்ட விவசாயிகள் கவலை யில் உள்ளனர்.

தேவகோட்டை அருகே கூத்தளூரை சேர்ந்த விவ சாயி கருப்பையா கூறுகை யில், இவ்வாண்டு பூக்கள் அதிகளவில் பூக்கவில்லை. பூத்த பூக்களும் கடும் வெயி லால் கருகி விட்டன.

ஒரு கொத்தில் ஒரே ஒரு பூ மட்டும் பூத்துள்ளது. விளைச்சல் பாதிப் பால், சாகுபடி செலவில் பாதியை கூட எடுக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது‘ என்றார்.

முந்திரி வியாபாரி பண் ருட்டி பாஸ்கரன் கூறுகை யில், ‘கேரளா, மங்களூர், ஆந்திரா, ஒரிசா பகுதிகளில் இருந்தும் மலேசியா, கானா, இந்தோனேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்தும் கொட்டை முந்திரி பண்ருட்டிக்கு வருகிறது. இதில் கேரளாவில் இருந்து வரும் முந்திரிதான் முதல் தரமாக கருதப்படுகிறது. இது கிலோ ரூ.400 முதல் ரூ.460 வரை விற்கப்படுகிறது.

தமிழகத்தில் இவ்வாண்டு முந்திரி விளைச்சல் கடுமை யாக பாதித்துள்ளதால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் முந்திரியையே நம்ப வேண்டியதுள்ளது. தமிழகத்தில் விளையும் முந் திரி சுவை அதிகம் இருந்த போதும், ரூ.300 முதல் ரூ.400 வரையே விற்கப்படுகிறது‘ என்றார்.

விவசாயம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »