தேவகோட்டை சரக விளையாட்டுப் போட்டிகள்


தேவகோட்டை கல்வி மாவட்ட சரக விளையாட்டுப் போட்டிகள் பரிசுளிப்பு விழா இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்.பள்ளியில் நடைபெற்றது.

சரக விளையாட்டுப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கி  25-ம்தேதி  வரை இப்பள்ளியில் நடைபெற்றன. புதன்கிழமை காலை நடைபெற்ற இறுதிநாள் துவக்க விழாவில் பள்ளி முதல்வர் ஷீனாஜோசப் வரவேற்றார்.  தேபிரித்தோ பள்ளித் தலைமையாசிரியர் வில்சன் தேகியக்கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார அதிபரும் சகாய மாதா பங்குத்தந்தையுமான மரிய ஆசிர்வாதம், வட்டார உடற்கல்வி ஆய்வாளர் அருளாந்துசாமி, மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் ராஜதுரை, பள்ளித் தாளாளர் டெய்சிதாமஸ் ஆகியோர் வாழ்த்தினர்.

தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர் சூப்பர் சீனியர் பிரிவில் இமானுவேல் 17 பள்ளிகளுடன் முதல் இடமும், சீனியர் பிரிவில் தேபிரித்தோ பள்ளி மாணவர் மணிகண்டன், ராஜா இருவரும் 13 புள்ளிகளுடன் முதலிடமும், ஜூனியர் பிரிவில் தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர் முல்லேஸ்வரன் 16 புள்ளிகளுடன் முதலிடமும் பெற்றனர்.   பெண்கள் பிரிவில் தனிநபர் போட்டிகளில் புனித மரியன்னை பள்ளி மாணவி பானுப்பிரியா சூப்பர் சீனியர் பிரிவில் 20 புள்ளிகள் பெற்று முதலிடமும், சீனியர் பிரிவில் அழகியமீனாள் 13 புள்ளிகளுடன் முதலிடமும், சீனியர் பிரிவில் கனிமொழி  15 புள்ளிகள் பெற்று முதலிடமும் பெற்றனர்.    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தேவகோட்டை நகரத்தார் பள்ளி 167 புள்ளிகளுடன் பெற்றது. பெண்களுக்கான போட்டியில் புனித மரியன்னை பள்ளி 181 புள்ளிகளுடன் பெற்றது. குழு விளையாட்டுக்களில்  தேபிரித்தோ பள்ளி 70 புள்ளிகளுடன் சிறந்த பள்ளி என்ற பெருமையைப் பெற்றது.

Advertisements
விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கிரிக்கெட் போட்டி


கல்லல் : கல்லல் நகர இளைஞர் காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் இருந்து 20 க்கும் மேற் பட்ட அணிகள் பங்கேற் றன. கல்லல் அணி முதல் பரிசு, அறந்தாங்கி இரண் டாம் பரிசு, சிங்கம்புணரி மூன்றாம் பரிசு பெற்றன. வென்றவர்களுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பெருமாள், கவுன்சிலர் ராணி பரிசு வழங்கினர்.

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »