டூவீலர்கள் மோதி விபத்து ஒருவர் பலி : 3 பேர் காயம்


ஆறாவயல்: திருப்புத்தூர் அருகே தென்மாபட்டை சேர்ந்தவர் சரவணன் (33). இவர் நண்பர் புகழேந்தியுடன் ஹீரோ ஹோண்டா பேஷன் டூவீலரில் தேவகோட்டை நோக்கி சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நிறமங்கலத்தை சேர்ந்தவர் குமார்(37). இவர் தனது நண்பர் பிரபுவுடன் ஹீரோ ஹோண்டா பிளஸ் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) தேவகோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர். இருவரது டூவீலரும் சங்கரபதிகோட்டை அருகே வந்தபோது நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், சரவணன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். டூவீலரில் வந்த குமார், பிரபு, புகழேந்தி காயமுற்றனர். தேவகோட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி விசாரிக்கிறார்.

Advertisements
விபத்துக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »