சோம. வள்ளியப்பன்


சோம. வள்ளியப்பன்

சோம. வள்ளியப்பன்

சொந்த ஊர், தேவகோட்டை. BA பொருளாதாரம், மற்றும் MBA வில் மனித வளமும் படித்திருக்கும் வள்ளியப்பன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தாஜ் இண்டர் காண்டினெண்டல் ,BHEL, பெப்சி, வெர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டெஷன் போன்ற் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்சமயம் சென்னையில் மனித வளத்துறைன் துணைத்தலைவராக ஒரு தனியார் குழுமத்தில் பணிபுரிகிறார்.

மக்கள் தொலைக் காட்சி, சன், சன் நியூஸ், ஜெயா, ஜெயாபிளஸ்,விஜய், பொதிகை தொலைக் காட்சி கலைங்கர், கலைங்கர் செய்திகள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, பங்குச் சந்தை பற்றியும் மனிதவள மேம்பாடு குறித்தும்தொடர்ந்து பேசி வருகிறார்.

தினமணி நாளிதழிளில் இவர் 4 ஆண்டுகள் தொடர்ந்து நடுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், நாணயம் விகடன் அமுதசுரபி, நமது நம்பிக்கை போன்ற இதழ்களில் தொடர்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய, அள்ள அள்ளப் பணம் ( 4 பாகங்கள்) என்ற பங்குச் சந்தை பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துவருகிற புத்தகமாகும்

இட்லியாக இருங்கள், காலம் உங்கள் காலடியில், தொட்டதெல்லாம் பொன்னாகும், உலகம் உன்வசம், உஷார் உள்ளே பார், யார் நீ,  உறுதி மட்டுமே வேண்டும், வாங்க பழகலாம், சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? நம்பர் 1 சேல்ஸ்மென் உட்பட இதுவரை 25 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

மக்கள் தொலைக் காட்சி

50 நிகழ்ச்சிகளுக்கும் அதிகமாக- வளாகம்- பங்குச் சந்தை பற்றிய, ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சிகள்

சிந்திக்க சில நிமிடங்கள்- காலை நேரத்தில் – 20 க்கும் அதிகமான நிகழ்ச்சிகள்

தமிழ் புத்தாண்டு போன்ற சிறப்பு நிகழ்சிகளில்

கலைஞர் தொலைக்காட்சி

கற்றதும் பெற்றதும் நிகழ்ச்சி – சுயமுன்னேற்றம் பற்றிய 5 நிமிட ஒளிபரப்பு- 15 குக் அதிகமான நிகழ்ச்சிகள்.

கலைஞர் செய்திகள் தொலைக் காட்சி

செய்திகளில்- பொருளாதாரம் மற்ரும்பங்குச் சந்தை நிலவரம் குறித்த கருத்துக்கள்- பல முறை

வணிகம் வசப்படும் நேரலை நிகழ்ழ்ச்சியில்- சிறப்பு விருந்தினராக- மூன்று முறை

சன் தொலைக் காட்சி

வணக்கம் தமிழகத்தில் சிறப்பு விருந்தினராக- இரு முறை

சன் நியூஸ்

சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சிகளில், செய்திகளில் , பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை நிலவரம் குறித்த கருத்துக்கள்- பல முறை

ஜெயா தொலைக்காட்சி

காலை மலரில்- சிறப்பு விருந்தினராக

மதிய நேர நேரலைகளில்

ஜெயா பிளஸ்

செய்திகளில்- பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை நிலவரம் குறித்த கருத்துக்கள்

பொதிகை தொலைக்காட்சி

காலைத் தென்றல்- நேரலை நிகழ்ச்சியில் சனிக்கிழமைகளில், பங்குச் சந்தை குறித்து

உங்களுக்குத் தெரியுமா? நேரலை

பொருளாதாரம் குறித்த நிகழ்ச்சிகள்- செய்தி விமரிசனம்

விஜய் தொலைக்காட்சி

நீயா நானா – படிக்காத கோடீஸ்வரர்கள் நிகழ்ச்சியில், இரு சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக.

பத்திரிக்கைகளில் எழுதியது

தினமணி நாளிதழில் நடுபக்க கட்டுரைகள்

மனித வளம் மற்றும்  வாழ்வியல் தொடர்பாக 50 க்கும் அதிகமான கட்டுரைகள்- மாதம் ஒன்று வீதம் 4 ஆண்டுகளுக்கு மேலாக-

தினகரன் நாளிதழில்

நிதி பற்றிய விளக்கங்கள்  தொடர்ந்து பல வாரங்களுக்கு

ஆனந்த விகடன் இதழில்

29 வாரங்களுக்கு தொடராக- பணம் பண்ணலாம் பணம் பணம்- சாதாரண மனிதர்கள் வியாபாரங்கள் செய்து அடைந்த வெற்றிகள் குறித்த உதாரணங்கள் விளக்கங்களுடன்.

நாணயம் இதழில்

சேமிப்பு பற்றிய தொடர் கட்டுரைகள்- ஓர் ஆண்டிற்கு.

அமுதசுரபி இதழில்

சின்ன தூண்டில் பெரிய மீன் எனும் சுய முன்னேற்ற தொடர்

மங்கையர் மலர் மாத இதழில்

பல் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் – 1990 களில் எஸ்.எம்.வி என்ற பெயரில்

நமது நம்பிக்கை மாத இதழில்

முன்னேற்றம் இந்தப்பக்கம் – 19 மாதங்கள்

காலம் உங்கள் காலடியில் – 12 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது

கிராஸ் ரூட் இதழில்

கனவு தேசம் என்ற தொடர்- 10 இதழ்களுக்கும் மேலாக

குமுதம் இதழில்

பணம் பண்ன நீங்க ரெடியா? தொடர் – 19 வாரங்கள்- பங்குச் சந்தை பற்றியது

பணமே ஓடிவா! – 29 வாரங்கள்- சுயமுன்னேற்றம் மற்ரும் பண முதலீடுகள் தொடர்பாக

பணம்: சில சந்தேகங்கள்- சில விளக்கங்கள்- 20 வாரங்களுக்கும் மேலாக எழுதிய கேள்வி பதில் பகுதி

சிறுகதைகள்

பிரசுரமானவை 38, இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த மாத சிறுகதையாக தேர்வு செய்யபட்டது : 1

எழுதிய புத்தகங்கள்

கிழக்கு பதிப்பகம்

1 அள்ள அள்ள பணம் 1 ( பங்கு வர்த்தகம் -அடிப்படைகள்)
2 அள்ள அள்ள பணம் 2 (பங்கு வர்த்தகம்- Fundamental & Technical Analysis)
3 அள்ள அள்ள பணம் 3 (பங்கு வணிகம்- பியூட்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்)
4 அள்ள அள்ள பணம் 4 (பங்கு வணிகம்- போர்ட்போலியோ முதலீடுகள்)
5 தொட்டதெல்லாம் பொன்னாகும் (வியாபாரம்)
6 காலம் உங்கள் காலடியில்( நேர நிர்வாகம்)
7 சொர்க்கத்தின் சொந்தக்காரர் ( வீடு, பிளாட் வாங்குவது)
8 ஆளப்பிறந்தவர் நீங்கள்( தலைமைப் பண்புகள் லீடர்ஷிப் பற்றி)
9 இட்லியாக இருங்கள் (எமோஷனல் இண்டலிஜென்ஸ்- உணர்வு மேலாண்மை)
10 உலகம் உன் வசம் ( தொடர்புக்கலை- கம்யூனிகேஷன்)
11 யார் நீ ( பர்சனாலிட்டி பற்றிய புரிதல்)
12 உஷார் உள்ளே பார் ( மனதை புரிந்துகொண்டு செயலாற்றல்)
13 பணம் பண்ணலாம் பணம் பணம் (பல்வேறு சுய தொழில்கள்- ஆனந்தவிகடனில் வந்த தொடர்)
14 டீன் தரிகிட (இளைங்கர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி)
15 மன அழுத்தம் விரட்டலாமா? (மாணவர்களுக்கான ஸ்டிரெஸ் பற்றி)
16 உறுதி மட்டுமே வேண்டும் (கமிட்மெண்ட்)
17 வாங்க பழகலாம் (About People Management)
18 திருமண கைடு (வாழ்க்கைத்துணை தேர்வு மற்றும் திருமணத்திற்குபின்)
19 சிறந்த நிர்வாகி ஆவது எப்படி ( வேலையிடத்தில் முன்னேற்றம்)
20 No 1 சேல்ஸ்மென்
21 ஆல் தி பெஸ்ட்
22 அள்ள அள்ள பணம் – 5

மணிவாசகர் பதிப்பகம்

23 திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்
24 மகிழ்ச்சி எங்கே ? (தினமணி நடுபக்க கட்டுரைகளின் முதல் தொகுப்பு)

மணிமேகலை பிரசுரம்

25 நான் உனக்காக நீ எனக்காக (சிறுகதை தொகுப்பு)

விஜயா பதிப்பகம்

26 அதிகாரம் அல்ல, அன்பு (தினமணி கட்டுரைகளின் 2ம் தொகுப்பு)
27 தடையொன்றும் இல்லை (தினமணி கட்டுரைகளின் 3ம் தொகுப்பு)
28 பணமே ஓடிவா! (பணத்தினை சேமிப்பது, முதலீடுசெய்வது-பல்வேறு வாய்ப்புகள்-குமுதத்தில் வந்த தொடர்)
Advertisements
மண்ணின் மைந்தர்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

லேனா தமிழ்வாணன்


லேனா தமிழ்வாணன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்து இன்று உலகம் சுற்றும் வாலிபனாக, மக்கள் போற்றும் நாயகனாக திகழ்பவர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள்!

57 நூல்களின் ஆசிரியர்.

2400 நூல்களின் பதிப்பாசிரியர்.

1954 – இல் பிறந்தவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசினையும், பாரத ஸ்டேட் வங்கியின் பரிசினையும், மூவேந்தர் இலக்கியப் பரிசினையும், பதினேழு கல்வி மற்றும் பொதுநல அமைப்புகளின் விருதுகளையும் வென்றவர்.

மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர்.

70- க்கு மேற்பட்ட எழுத்தாளர்களைக் கொண்ட குழு இது.

கல்கண்டு, குமுதம் இதழ்களின் துணை ஆசிரியர்.

அண்டார்டிகா கண்டத்தை மட்டும் பயணம் மேற்கொள்ளாமல் விட்டு வைத்திருப்பவர்.

இவரது படைப்புகளை ஆராய்ந்து மூன்று மாணவர்கள் எம்.பில். பட்டங்களையும், இரு பேராசிரியர்கள் பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்.

இலக்கியச் சிந்தாமணி என்ற பட்டம் பெற்றவர். நேர நிர்வாகத் துறையில் பதின்மூன்று ஆண்டுகாலமாக உழைத்து வருபவர்.

விருதுகள்:

* தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாசிரியருக்கான ராஜீவ் காந்தி விருது – 1992 – 1993

* ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள் – தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பயண நூலாகத் தெரிவுசெய்து, 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.

* ஒரு பக்கக் கட்டுரை – பாகம் 12 – பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசும், ரூபா 3,000 பரிசுத்தொகையும்

* முனைவர் பூவண்ணன் விருது – தேனீ இலக்கியக் கழகம் – 2008

* சாதனைச் செல்வர் விருது – முல்லைச் சரம் பத்திரிகை விழா – 1997

* மூவேந்தர் விருதும், 10,000ரூபாய் பரிசும் – தமிழைத் தேடி ஒரு பயணம் – மூவேந்தர் இலக்கியக் கழகம் – 1999

மண்ணின் மைந்தர்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

திரு திருவாசகம்


தேவகோட்டை அருகிலுள்ள சிறுவேலன்குடியில் 9.5.1951- அன்று திருவாசகம் பிறந்தார்.

தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். பள்ளியில் பள்ளிப் படிப்பையும், காரைக்குடி அழகப்பா செட்டியார் கல்லூரியில் பட்டப் படிப்புகளையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., படிப்பையும், இங்கிலாந்தில் உள்ள தெற்கு ஆம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி.-க்கு பிந்தைய உயர் படிப்பையும் முடித்தார்.

வணிகம், மேலாண்மை துறை பேராசிரியரான இவர், மதுரை யாதவா கல்லூரியில் 10 ஆண்டுகள் கல்லூரி முதல்வராக பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த போது, அப்பல்கலைக்கழகம் தேசிய அளவில் 2-வது சிறந்த பல்கலைக்கழகம் என பெயர் பெற்றது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தற்பொழுது பணியாற்றி வருகிறார்!


இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிடம் இருந்து சமூக சேவைக்கான “தேசிய விருது’ பெற்றுள்ளார்.

மண்ணின் மைந்தர்கள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

“வித்வத் சிகாமணி” சிந்நயச் செட்டியார்


“பெரும்புலவர்” என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் “வித்வத் சிகாமணி” சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் “மேலவீடு” எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் – உறையூர் பிரிவில், 1855ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார் – லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.

சிந்நயச் செட்டியார் ஓர் ஆசுகவி. இவரது குரு, தேவகோட்டை “வன்றொண்டர்” நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்.

* “சிலேடைப் புலி” பிச்சுவையர்
* காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம்
* இராமநாதபுரம் இரா.இராகவையங்கார்

ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.

இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, உருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். இரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.

இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

அவர் எழுதியுள்ள நூல்கள்,

* மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம்
* நகரத்தார் வரலாறு
* திருவொற்றியூர்ப் புராணம்
* குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ்
* தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி
* இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி
* திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா
* காசி யமக அந்தாதி
* வெளிமுத்திப் புராணம்
* கும்பாபிஷேக மகிமை
* ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு
* கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்

முதலியன.

இரா.இராகவையங்கார் தன் மாணவர் மு.இராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது.

சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்குப் பிள்ளை இல்லாததால், இருவரும் காசிக்குச் சென்று ஓராண்டு பிள்ளைவரம் வேண்டி, தினந்தோறும் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தொழுது வந்தனர். குழந்தை பிறக்க வேண்டி ஒரு வாழை மரக்கன்று நட்டனர். அது வளர்ந்து, குலைதள்ளியபொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குக் “காசி” என்று பெயரிட்டனர். பின்னாளில் தேவகோட்டைக்குத் திரும்பி, தமிழ்ப் பணியிலும், ஆன்மிகப் பணியிலும் ஈடுபட்டார். குழந்தை காசி, மூன்றாண்டுகளுக்குப் பின் காலமானது விதி வசமே!

பிறகு, சிந்நயச் செட்டியார் திருவாரூரில் சில காலம் வசித்தார். பெருமளவு தேவகோட்டையில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில், அங்கு யாராவது புலவர்கள் சொற்பொழிவாற்ற வந்தால், முதலில் சிந்நயச் செட்டியாரைச் சந்தித்து அவரது ஆசிபெற்றே செல்வது வழக்கம்.  சிந்நயச் செட்டியார் மிகவும் அவையடக்கம் உள்ளவர். அவர், தனது மயின்மலைப் பிள்ளைத் தமிழ் அவையடக்கப் பாடலில், “கடையடுத்த மடமையினேன்” என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார்.

நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்; வாக்குப் பலிதமும் உடையவர். ஒருமுறை வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றபொழுது, அவ்வூர் மக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, “நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும்” என்றார்கள். உடனே அவர், “பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே” என்று கவிபாடினார்.

என்ன அதிசயம்! ஆண் பனை பெண் பனையாக மாறிப் பூத்துக் காய்த்துப் பனம்பழம் மூன்று கீழே விழுந்த காட்சியைக் கண்டு ஊரே வியந்தது.  திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும், வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான “வினமல்” என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.  சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் இருந்தபொழுது ஒரு நாள் காலையில் சிவபூஜை முடித்துக் கம்பளத்தில் அமர்ந்தபொழுது, ஜெர்மானியர் இருவர் வந்து, தமிழில் பேசி, அவரிடம் இருந்து சில சுவடிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். சில தினங்களில் அவர்கள், இவருக்கு ஜெர்மனியில் இருந்து சுவடிக்கான பணம் அனுப்பி உள்ளனர். சிந்நயச் செட்டியார் காலமாகுமுன் அப்பணம் வந்திருக்கிறது.  இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். “வன்றொண்டர்” நாராயணன் செட்டியார், “தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே” என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது சரித்திரத்தில் கூறியிருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த “வயிநாகரம்” குடும்பத்தைச் சேர்ந்த இராமநாதன் செட்டியார், தமது “கவிதை மலர்” என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.

ஒருமுறை அன்பர்கள் சிலர் அவரைப் பார்த்து, “செல்வத்தின் முன் கல்வி நிற்குமா?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “செல்வம் எடைக்கு நிற்கும்; கல்வி உறைக்கு நிற்கும்” என்றார்.

தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, “சித்துடனே நயம் சேர்ந்தால் –  சிந்நயம்” ஆகும்.

தேவகோட்டை அருகில் “இறகுசேரி”, “கண்டதேவி” என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், இராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். “ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி”, அனுமன், “கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்” என்பார்.

இவருடைய சாதனைகளில் மேலும் இரண்டு உள்ளன.

அவை: திருவாமாத்தூர் வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார்.

சிந்நயச் செட்டியார் 1900ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!

அரு.சோமசுந்தரன்

மண்ணின் மைந்தர்கள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »