பனிப்புலான்வயல் கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற முடிவு


தேவகோட்டை சகாயமாதா ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்டது பனிப்புலான்வயல்  மாதா கோயில். இங்கு வழிபாடு நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து,   அப்போதிருந்த உதவி ஆட்சியர் 145 தடை உத்தரவை பிறப்பித்தார்.

இதனால் அந்த ஊர் மக்கள் புதிதாகக் கட்டிய கோயிலை திறக்க முடியாமல் இருந்தனர். இதுகுறித்து சிவகங்கை மறை மாவட்டம் சார்பில் பல முறை கிராம மக்களுடன் பேச்சு நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந் நிலையில், சகாயமாதா ஆலயப் பங்குத் தந்தை பாதுகாப்பு கருதி அந்த கிராமத்துக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார்.   இந்த நிலையில், புதன்கிழமை அந்த ஊரைச் சேர்ந்த நூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சகாயமாதா ஆலயத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து டி.எஸ்.பி கணேசன், வருவாய் ஆய்வாளர் மாணிக்கவாசகம் உளளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, அவர்களுடனும் பங்குப் பணியாளருடனும் பேச்சு நடத்தினர்.

இதில் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு நடத்தலாம் என்ற போலீஸôரின் கருத்தை ஏற்க கிராம மக்கள் மறுத்து விட்டனர்.    இதன் பின்பு, அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து நாங்கள் அனைவரும் விடுதலைச் சிறுத்தை கட்சி முன்னிலையில், வேறு மதத்துக்கு மாறப் போவதாகத் தெரிவித்தனர். அப்போது விடுதலைச் சிறுத்தை கட்சி தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் இரும்பொறை, ஒன்றியச் செயலாளர் சேவியர், துணைச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisements
மக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

நலத்திட்ட உதவி வழங்கல்


தேவகோட்டை டாக்டர் செபஸ்தியான் அன்னம்மாள் சமுதாயக் கல்லூரி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேதகு ஆயர் எட்வர்டு பிரான்சிஸ் அறக்கட்டளை மற்றும் ஒய்ஸ்மென் கிளப் இணைந்து நடத்திய இந்த விழாவில், ஒய்ஸ்மென் சர்வதேச அமைப்பின் தென்மண்டல இயக்குநர் விருதுநகர் ரமேஷ் தலைமை வகித்தார்.

கோடிக்கோட்டை டி.எம்.ஐ. காப்பகத்தின் தலைமை சகோதரி ரஞ்சிஸ்மேரி வரவேற்றார்.

அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் போஸ்கோ வாழ்த்தினார்.

இதில், காப்பகத்தில் பயிலும் மாணவிகளின் வசதிக்காக சாப்பாட்டு தட்டுகள் வைக்கப்படும் மூன்று இரும்பு அலமாரிகளை, அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.    இந்த நிகழ்ச்சியில், ஒய்ஸ்மென் கிளப் தேவகோட்டை கிளைத் தலைவர் ஆல்பர்ட் மனோகரன், செயலர் சேகர், பொருளாளர் பழனியப்பன், மக்கள் சக்தி இயக்க பொறுப்பாளர்கள் கர்ணன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

தேவகோட்டை அருகே கலவரத்தில் கொல்லப்பட்ட 5 பேர் சமாதியில் வீரவணக்கம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு


தேவகோட்டை அருகே உள்ளது உஞ்சனை கிராமம். அங்கு அய்யனார் புரவி எடுப்பு விழா கடந்த 1979-ம் ஆண்டு நடந்தது. அப்போது இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினத்தையொட்டி வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

30-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று மாலை உஞ்சனை கிராமத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தலைமையில் ஊர்வலமாக மலர் வளையத்துடன் 5 பேரின் சமாதிக்கு சென்றனர். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் காரைக்குடி டாக்டர் சேது தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன், டாக்டர் சுப்பிரமணியன், தமிழ் அரிமா, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் என்.பாலுச்சாமி ஆகியோர் பேசினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் உஞ்சனை பாலு, சண்முகநாதபுரம் கணேசன் கலந்து கொண்டனர்.

பகுஜன்சமாஜ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்நாதன், தாக்கமுத்து, பாலா, தர்மலிங்கம், வெள்ளைச்சாமி, பாண்டி, காந்தி, செல்வம், காரைக்குடி பாண்டி, பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் கஜேந்திரன், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மள்ளர் இலக்கிய கழகம் சார்பில் மாநில பொருளாளர் அழகர், மாவட்ட செயலாளர் கடிகை ரவி, கீழ்குடி சின்னா, இளைய ராஜா, காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டையில் கால்வாய் சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேக்கம்


தேவகோட்டை நகரில் பல இடங்களில் கால்வாய் சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

நகரின் முக்கிய தெருக்களான மேல பஜார் மற்றும் கீழ பஜாரில், நகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக மையங்கள் உள்ளன.

இந்தத் தெருக்களில் செல்லும் கழிவுநீர் கால்வாய் நீண்டநாள்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

இது குறித்து, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் கேசவன் மாதந்தோறும் நடைபெறும் நகர்மன்றத் கூட்டத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் கழிவுநீர் தெருக்களின் பல இடங்களில் தேங்குவதால், கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்


மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

தேவகோட்டையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நகர்மன்றத் தலைவர் இல்லத்திலிருந்து தொடக்கி வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. தேவகோட்டையில் நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமியிடம் அவர்களது வீட்டில் உள்ள நபர்களின் விவரங்கள், வீட்டில் உள்ள பொருள்கள், வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்டவை கேட்டு எழுதப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் ஆறுமுகம், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் சபியாபேகம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.   இதேபோல் நகரில் உள்ள 27 வார்டுகளிலும் நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்வுகள், மக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த கிராம மக்கள்


நூலகம் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழ உச்சாணி ஊராட்சி மன்றத்தின் பிரதான கிராமம். இங்கு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

இங்கு நூலகம் அமைக்க வலியுறுத்தி இந்த கிராம மக்கள் 2 மாதங்களுக்கு முன் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனிடையே அண்ணா கிராம நூலகம் அமைக்க கீழ உச்சாணிக்கு அனுமதி வந்துள்ளது. இதை அங்கு அமைக்க முற்படாமல் அருகிலுள்ள குலமங்கலம் கிராமத்தில் அமைக்க அந்த ஊராட்சித் தலைவர் முயன்றுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். அவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சு நடத்தினர். அப்போது அவர்கள் அண்ணா கிராம நூலகத்தை ஊராட்சி மன்ற தலைமையிடத்தில்தான் அமைக்க வேண்டும் என விதி உள்ளது. எனவே எங்களுக்கு நூலகம் அவசியம் அமைத்து தரவேணடும் என வலியுறுத்தினர்.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விதிப்படி ஊராட்சி தலைமையிடத்தில் நூலகம் அமைக்க வேண்டும் என்பது சரி. அதனால்தான் குலமங்கலம் கிராமத்தில் கட்ட ஒப்பந்தம் விடாமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதுகுறித்து ஆட்சியரிடம் பேசி நல்ல முடிவு எடுப்போம் என்றனர்.

இதில் திருப்தியடையாத கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினர். பின்னர் மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்தித்து முறையிட முடிவுசெய்து கலைந்து சென்றனர்.

இந்தப் பகுதியில் நூலகத்தை அமைக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

மக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டையில் ஜாதி சான்றுகள் மாயம்: முற்றுகை முயற்சி


தேவகோட்டை: தேவகோட்டையில் ஜாதி சான்றுகள் காணவில்லை என புகார் எழுந்ததையடுத்து பெற்றோருடன் மாணவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர் களும், பள்ளிகளில் சேர்வதற்காக பள்ளி மாணவர்களும் தற்போது தாலுகா அலுவலகங்களில், ஜாதி, வருமான, இருப்பிட சான்று வாங்குவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஜாதி, வருமான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்த னர். இதில் பெரும்பாலானவர்களுக்கு நேற்று சான்று தரப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால், பெற்றோருடன், மாணவர்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். அவர்களை வருவாய்துறை அலுவலர்கள், வரிசையில் நின்று வாங்கி செல்லுமாறு கூறினர். இதனால், பல மணிநேரம் காத்திருந்தனர். இதற்கிடையில், விண் ணப்பித்த சிலரின் சான்றுகளை காணவில்லை என புகார் எழுந்தது. இதில் ஆத்திரமுற்ற மாணவர்கள் பெற்றோருடன் கூச்சல் போட்டனர். சான்றுகளை தொலைத் தை கண்டித்து, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது. இது குறித்து மண்டல துணை தாசில்தார் விஜயாள் கூறுகையில்,””சான்றுகள் காணவில்லை என தெரிந்தால், உடனே மாணவர்கள் மேல்முறையீடு செய்து மீண்டும், பெற்றுக் கொள்ளலாம்,” என்றார்.

மக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »