தேவகோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரைவண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்

மேலச்செம்பொன்மாரி, ஆறாவயல், பேராட்டுக்கோட்டை, பொன்னி வயல் நாட்டார்கள் இணைந்து மாட்டு வண்டி பந்தயம் நடத்தினர். மாட்டு வண்டி பந்தயம் பெரியமாடு, நடுமாடு,சின்னமாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவாகவும், குதிரை பந்தயம் பெரிய குதிரை, சின்னகுதிரை என 2 பிரிவாகவும் நடைபெற்றது. போட்டிகளில் 50 வண்டிகள் கலந்து கொண்டன.

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடத்தை அடம்பூர் தங்கராஜா வண்டி யும், 2ம் இடத்தை அ.வள்ளாளபட்டி பூஞ்சோலை வண்டியும், 3ம்இடத்தை புதுத் தாமரைப்பட்டி சேதுராமன் வண்டியும் பெற்றது. நடுமாடு பந்தயத்தில் முதல் இடத்தை அவனியாபுரம் முருகன் வண் டியும், 2ம் இடத்தை கொட்டகுடி கண்ணன் வண்டியும், 3ம் இடத்தை மறவனேந்தல் துஸ்டக்கருப்பர் வண்டியும் பெற்றது.

சின்னமாடு பந்தயத்தில் முதலிடத்தை சிங்கத்திருமுருகப்பட்டி செல்லத்துரை வண்டியும், 2ம் இடத்தை நாகப்பன் பட்டி அஜித்குமார் வண்டியும், 3ம் இடத்தை பரளி மணி வண்டியும் பெற்றது. பூஞ்சிட்டு பந்தயதில் முதலிடத்தை மேலூர் புவனேஸ்வரி வண்டியும், 2ம் இடத்தை மணச்சை வெற்றிவிநாயகர் வண்டியும், 3ம் இடத்தை வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அஜ்மல்கான் வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

இதேபோல் பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் பேராட்டுக் கோட்டை மாயழகு வண்டியும், 2ம் இடத்தை தீர்த்தப்பூர் சிவபிரகாசம் வண்டியும், சின்னகுதிரை வண்டி பந்தயத்தில் முதலிடத்தை காளையார் கோவில் மேப்பல் சக்தி வண்டியும், 2ம் இடத்தை தீருதப்பூர் சிவபிரகாசம் வண்டியும் பெற்றது.

Advertisements

தேவகோட்டை பகுதியில் கோவில் திருவிழா: மாட்டு வண்டி பந்தயம்


திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் முனிநாதன் கோவில் 28-ம் ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ஏரியூர்-மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக மொத்தம் 51 வண்டிகள் கலந்துகொண்டன.

முதலில் நடந்த பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வண்ணாம்பாரைப்பட்டி காமேஸ்வரன் மற்றும் நகரம்பட்டி வைத்தியா வண்டியும், இரண்டாம் பரிசை நத்தம் விளாம்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், மூன்றாம் பரிசை அ.வண்ணாளப்பட்டி பூஞ்சோலை ஜெயக்கண்ணன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை தேவராம்பூர் ராமநாதன் வண்டியும், இராண்டாம் பரிசை ஏரியூர் ஆட்டோ ராஜா வண்டியும், மூன்றாவது பரிசை குண்டேந்தல்பட்டி தவராணி வண்டியும் பெற்றது.

மூன்றாவதாக நடைபெற்ற சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும், இரண்டாவது பரிசை ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் வண்டியும், மூன்றாவது பரிசை நெய்வாசல் பெரியசாமி வண்டியும் பெற்றது.

கடைசியாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதலாவது பரிசை மாம்பட்டி பாரிவள்ளல் வண்டியும், இரண்டாவது பரிசை செல்வேந்திரன் வண்டியும், மூன்றாவது பரிசை அலங்காநல்லூர் புதுப்பட்டி ராதா வண்டியும் பெற்றன.

இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோட்டூர்-வேலாயுதபட்டிணம் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 வண்டிகள் பங்கேற்று பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடந்த பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை தேவகோட்டை சோமசுந்தரம் வண்டியும், இரண்டாவது பரிசை ஆட்டூர் ராமநாதன் சேர்வை வண்டியும், மூன்றாவது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் உடப்பன்பட்டி சின்னையா அம்பலம் வண்டி முதல் பரிசையும், கல்லல் மார்க்கண்டன் வண்டி இரண்டாவது பரிசையும், கல்லூரணி காவேரி கருப்பையா பாலாஜி வண்டி மூன்றாவது பரிசையும் பெற்றன.

சிறுமருதூர் ஸ்ரீகருப்பர் காளியம்மன் கோயில் திருவிழா!


தேவகோட்டை : தேவகோட்டை சிறுமருதூர் ஸ்ரீகருப்பர் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அழகுவேலு பாபு, கண்டதேவி ஊராட்சி தலைவர் கேசவமணி, கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு, சிறுமருதூர் கிராம தலைவர் கருப்பையா, டாக்டர்கள் பெரியசாமி, ராமச்சந்திரன், பொறியாளர்கள் பாலசுப்பிமணியன், தட்சிணாமூர்த்தி, மள்ளர் கழக மாவட்ட அமைப்பாளர் ரவி, பங்கேற்றனர்.

கும்பாபிஷேகம்


தேவகோட்டை: கீழச்செம்பொன்மாரி, முத்துபிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சந்திரன் சிவாச்சாரியார், காரியப்பன், சுகுமாறன் வாத்தியார் தலைமையில் வேள் விகள் நடந்தன. அம்மன், பதினெட்டாம் படி கருப்பர், பரிவாரங்களுக்கு நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் செய்யப் பட் டது. குன்றக்குடி பொன் னம்பல அடிகள், ராமசாமி எம்.எல்.ஏ., திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் படிக்காசு, ஊராட்சி ஒன்றிய தலைவர் வள்ளுவன், நகராட்சி தலைவர் வேலுச்சாமி, டாக்டர்கள் ராஜூ, சண்முகம் பங்கேற்றனர்.

திருவிழாக்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிரமோற்ஸவ விழா


தேவகோட்டை: ரங்கநாத பெருமாள் கோயில் பிரமோற்ஸவம், 12 நாட்கள் நடந்தது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தினமும் இரவு சுவாமி வீதி உலா வந்தார். மகாலட்சுமி தாயாருக்கு லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். நண் பர்கள் நடையாளர் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது.

திருவிழாக்கள், நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டை கல்லாம்பிரம்பு காளியம்மன் ​கோயில் ​ திருவிழா


சிவகங்கை மாவட்டம்,​​ தேவகோட்டை கல்லாம்பிரம்பு காளியம்மன் ​கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ ​

ஜீவா நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக் கோயில் திருவிழாவை முன்னிட்டு,​​ பக்தர்கள் சிலம்பணி பிள்ளையார் கோயில் முன்பிருந்து பால்குடம் எடுத்து ஆர்ச் பூங்கா,​​ தியாகிகள் சாலை வழியாக கோயிலை சென்றடைந்தனர்.​ ​​ ​ ​ இவர்களைத் தொடர்ந்து,​​ பல பக்தர்கள் அலகு குத்தியும்,​​ காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.​ ​

பின்னர்,​​ கோயிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது.​ ​ பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.​ ​​ ​ ​ திருவிழாவை முன்னிட்டு,​​ பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

திருவிழாக்கள் இல் பதிவிடப்பட்டது . 2 Comments »