கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்


தேவகோட்டை : கண்டதேவி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மன் கோயில், குங்குமகாளியம்மன் கோயில்,தேரடி கருப்பர் கோயில் உள்ளது.இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா ஜன. 30ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

நேற்று காலை 9.20 மணிக்கு பிச்சைகுருக்கள் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் மூலஸ்தான கும்பத்திற்கு புனித நீரை ஊற்ற அனைத்து கோயில்களிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு நாட்டு அம்பலங்கள் ராமசாமி,பெரியகருப்பன், ராமசாமி, ரமேஷ் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டனர்.

போலீஸ் கெடுபிடி: போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.பாஸ் இல்லாமல் கட்சி கொடிகளை கட்டி வந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் , அமைச்சர் கோகுல இந்திரா, திருப்பணி குழு நிர்வாகிகள் தலைவர் சோமநாராயணன் செட்டியார், செயலர் வெங்கிடாசலம் செட்டியார், பொருளாளர் சேவுகன் செட்டியார், ஒன்றிய தலைவர் செந்தில்நாதன், கண்டதேவி ஊராட்சி தலைவர் முருகன், நகராட்சிதலைவர் கற்பகம், மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சொர்ணலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தசரதன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் பிர்லா கணேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டி, முன்னாள் நகராட்சி துணை தலைவர்கள் பாலமுருகன், பழனியப்பன், எல்.ஐ.சி. முகவர்கள் வெங்கடாசலம், செந்தில்நாதன், நகர சிவன்கோயில் டிரஸ்டி அழகப்பன், அன்பு, டி.டி.சுப்பிரமணியன், சொக்கலிங்கம், பஞ்சு வள்ளியப்பா மெட்ரிக் பள்ளி நிர்வாகி வள்ளியப்பன், பொறியாளர் ராமநாதன் , கருணாநிதி, சண்முகம், முத்தரசப்பன், வெள்ளையப்பன், மணிகண்டன், லயன்ஸ் துணை ஆளுநர் கணேசன்,ராஜா, நாராயணன் செட்டியார், ரத்தினம் செட்டியார், பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், வள்ளியப்பன், மெய்யப்பன்,பணியாளர்கள், கான்ட்ராக்டர் பஞ்சநாதன் மீனாட்சி கேபிள்ஸ், செட்டிநாடு லாக்கர்ஸ் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

Advertisements
கோவில்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

கொங்கிவயல் ஸ்ரீமுத்துகருப்பைய்யா ஆண்டவர்


ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

மகான்கள் முதலில் மனிதர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். சாதாரண வாழ்க்கையில் உழன்று, அதில் இருக்கக் கூடிய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த பிறகே, அற்புதங்கள் சிலர் வாழ்க்கையில் நிகழ்கின்றன. இள வயது பருவம் முடிந்ததும், ‘நாம் என்ன ஆக வேண்டும்?’ என்று நாம் விருப்பப்படலாம்; தப்பில்லை. ஆனால், தீர்மானிக்கின்ற உரிமை நம்மிடத்தில் இல்லை. இது இறைவனின் விருப்பம்.

அதுபோல்தான் கொங்கிவயல் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் கள்ளர் இனத்தில் பிறந்தவர் – முத்துகருப்பைய்யா (நகரத்தார்கள் ஊரான தேவகோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கொங்கிவயல்). தற்போது இவர் இதே ஊரில் முத்துகருப்பைய்யா ஆண்டவர் சுவாமிகள் என்கிற திருநாமத்தில் சமாதி கொண்டுள்ளார். ஆண்டவர் சுவாமிகளின் 74-ஆம் ஆண்டு குருபூஜை கடந்த 9.12.09 அன்று நடந்துள்ளது. ஆண்டவர் சுவாமிகளின் பக்தர்களுக்கு இது ஒரு மாபெரும் திருவிழா.

ஆடு மாடுகள் மேய்த்து, வயல்வேலைகளைப் பார்த்து வந்த குடும்பம். இறைவன் முத்துகருப்பைய்யாவை ஆட்கொள்ள வேண்டிய வேளையும் வந்தது. கொங்கிவயல் கிராமத்துக்கு அருகே ஒரு சாயபு வசித்து வந்தார். இவர் பார்க்கத்தான் சாதாரணமாக இருப்பாரே தவிர, இறை அருள் நிரம்பப் பெற்றவர். பல ஸித்துக்கள் கைவரப் பெற்றவர். இது கொங்கிவயல் கிராமத்தில் வசிக்கும் பலருக்கேகூடத் தெரியாது. கிராமத்தில் வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுத்து உண்பார். பலரும் இவருக்கு ஒரு பிடி அரிசியும், ஒரு பைசா நாணயமும் கொடுப்பர். இதை வழக்கமாகக் கொண்ட பல குடிமக்களும் உண்டு. இப்படிப் பிச்சையாகக் கிடைத்ததை வைத்து கிராமத்தின் ஒரு எல்லையில் அவற்றைச் சமைத்து உண்பார். அதோடு, எஞ்சி இருக்கும் உணவை அந்த வழியே செல்லும் மற்ற மக்களுக்கும் வழங்குவார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்


அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்    :      சுந்தரேஸ்வரர்
உற்சவர்    :      சேக்கிழார்
அம்மன்/தாயார்    :      மீனாட்சி
பழமை     :       500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்     :       தேவகோட்டை
மாவட்டம்     :      சிவகங்கை
மாநிலம்     :      தமிழ்நாடு

திருவிழா:

வைகாசி பூச நட்சத்திரத் தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந் தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.

தல சிறப்பு:

இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் “சேக்கிழார் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை

பொது தகவல்:

இரு ராஜ கோபுரங் களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வர ரும் தனித்தனியாக வீற்றிருக்கின்ற னர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த் தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசா லாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ர மணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங் கள், கன்னிமூலை விநாயகர் ஆகி யோருக்கு சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற் புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெரு மானுக்கு கோயில் அமைக்க முயன் றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வது தான். இங்கே சிவனடியாரான சேக் கிழாருக்கு, இன்னொரு தொண் டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. அங்கே சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார்.

இந்த கோயிலில் ஒலிப்பதற்காக பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் வாங்கி னார். அதில், “சேக்கிழார் கோயில் மணி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு:

63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை “மனோன்மணியம்’ என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார்.

மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத் தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக் கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழா ருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்

கோவில்கள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தி ஆலயம்


இராமயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில் கண்டேன் சீதையை என்று அனுமன் ராமனிடம் கண்டதேவியில் தான் கூறியதாக புராணச் செய்திகள் கூறுகின்றன.

தேர் பவனிக்கு புகழ்பெற்றது தேவகோட்டை, கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தி ஆலயம் .

தேவகோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சமேதராய் இக்கோயிலில் வீற்றிருக்கிறார். கிரகிலி நாதர் எனவும் அழைக்கப்படுகிறார். 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், ஆனி மாதத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு, சுற்றியுள்ள 75 கிராமங்களிலிருந்தும் மக்கள் கூடுவார்கள்.

கோவில்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »