தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை


தேவகோட்டை கண்டதேவி சாலையை சேர்ந்தவர் தங்கம் சீனிவாசன். தொழில் அதிபரான இவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். வீடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் சீனிவாசன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு தங்கம் சீனிவாசனின் மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சரோஜா எழுந்தார். சிறிது நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதற்குள் மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது கொள்ளையர்கள் பணம், நகை எங்கு வைத்து இருக்கிறீர்கள் என்று மிரட்டினர்.

உடனே சரோஜா பணம், நகை எல்லாம் அருகே உள்ள அரிசி ஆலையில் உள்ளது. வீட்டில் நகைகள் இல்லை என்று கூறினார். உடனே கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவை கையில் பிடித்துக்கொண்டு பணம்-நகை எங்கு உள்ளது என்று கூறாவிட்டால் குழந்தையை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

வீட்டில் இருந்த ஒரு பெண் ணையும் பலாத் காரம் செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன சரோஜா மேல்மாடியில் உள்ள பீரோவில் தான் நகை உள்ளது. எங்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.

இதையடுத்து கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 225 பவுன் நகை ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கட்டிக் கொண்டு கீழே வந்தனர். சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோர் கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரிடம் தாலி செயின்களை கழற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் தாலி செயின்களை கொடுக்க மறுத்ததால் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி சரோஜா, நாகலட்சுமி, நிரோஜா கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பறித்துக்கொண்டனர்.

அப்போது ராஜலட்சுமி, எனது தாலி செயினை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கொள்ளையர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினார். இதனால் கொள்ளையர்கள் அவரது தாலி செயினை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். மொத்தம் 225 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம். லேகா என்ற மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தங்கம் சீனிவாசன் வெளியூர் சென்றபோது கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதால் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisements
குற்றங்கள், சம்பவம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டையில் வாலிபர் குத்திக் கொலை: காட்டுக்குள் பிணம் வீச்சு


தேவகோட்டை அடுத்த ரஸ்தா ரெயில் நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் நேற்று மாலை தேவகோட்டை வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு முந்திரி தோட்டத்தின் நடுவே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.

இறந்து கிடந்த வாலிபர் வெள்ளை சட்டையும், நீலநிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து உள்ளார். இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கல்லல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் பெயர் விவரம், கொலைக்கான காரணம் என்ன? கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

தேவகோட்டை அருகே துணிகரம்: வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை


தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெய் மண்ட். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று இருந்தார். அந்த சமயத்தில் “மர்ம” ஆசாமிகள் அவரது வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.

காரைக்குடி சென்று விட்டு வீடு திரும்பிய ரெய்மண்ட் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை – மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேவ கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வர வழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

தேவகோட்டையில் போலி மதுபான ஆலை ரூ.6 லட்சம் எரிசாராயம் பறிமுதல்


தேவகோட்டையில் போலி மதுபானம் தயாரித்து வந்த கும்பலை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 525 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள சின்ன துகவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (33). இவர் கோவை டாஸ்மாக் பாரில் வேலை பார்த்தார். இவரது நண்பர்களான ஆண்ட்ரி வயலைச் சேர்ந்த சந்திரசேகர் (40), திருப்புத்தூர் கண்ணன் (38), கடம்பான்குளம் நடராஜன் (34), தமிழரசு (40)ஆகியோர் அங்கு பல்வேறு பணிகளில் இருந்தனர்.

பாரில் வருமானம் வருவதை அறிந்த அலெக்சாண்டர், மற்ற நான்கு பேர் துணையுடன் போலி மதுபானம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக, தேவகோட்டை அருகே வலங்காவயலை சேர்ந்த அற்புதம் என்பவரது தோட்டத்தை 50 ஆயிரத்திற்கு குத்தகைக்கு எடுத்தனர். விவசாயம் செய்வது போல், யாருக்கும் தெரியாமல் போலி மதுபானம் தயாரித்தனர். இதற்காக, கேரளாவை சேர்ந்த தாசிடம் எரிசாராயம், சென்னையில் இருந்து போலி லேபிள்களை வாங்கியுள்ளனர். இங்கு தயாரிக்கும் போலி மதுபானங்களை கோவைக்கு அனுப்பி, அங்குள்ள டாஸ்மாக் பார்களில் விற்றுள்ளனர். போலீசார், பார்களில் நடத்திய சோதனையில், போலி மதுபானம் விற்பதும்,தேவகோட்டையில் தயாரித்த விபரமும் தெரிந்தது. இது குறித்து சிவகங்கை கூடுதல் எஸ்.பி., கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.

நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அவரது தலைமையில், டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆத்மநாபன், சரவணன், போலி மதுபான ஆலைக்கு சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த கும்பல், அங்கிருந்து தப்பியது. தோட்டத்து வீட்டில் இருந்த கலாதேவியிடம் விசாரித்தனர். அவரது தகவல்படி, காரில் தப்பிய அலெக்சாண்டர் உட்பட 5 பேரையும் கைது செய்தனர். பறிமுதல்: ஆலையில், 15 பிளாஸ்டிக் கேனில் பதுக்கி வைத்திருந்த 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 525 லிட்டர் எரிசாராயம், 5,000 மதுபாட்டில்கள், 3,400 பாட்டில் மூடி, 150 போலி லேபிள், தமிழக அரசு எம்பளம் பொறித்த 400 ஹாலோ கிராம் லேபிள், டூவீலரை பறிமுதல் செய்தனர். கூடுதல் எஸ்.பி., கூறுகையில், “” எஸ்.பி., அனில்குமார் கிரி உத்தரவுப்படி, இக்கும்பலை பிடித்தோம். அவர்களுக்கு எரிசாராயம், லேபிள்கள் சப்ளை செய்த இருவரை பிடிக்க, போலீசார் சென்னை, கேரளா விரைந்துள்ளனர். இதில் தொடர்புள்ள இன்னும் சிலரை பிடித்து, நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க மோதல்


தேவகோட்டை சருகணி ரோட்டில் சாத்திக்கோட்டை காலனி உள்ளது.இதன் அருகே அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்தாண்டு காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி முத்தாத்தாள் இந்த இடத்தில் பட்டா கேட்டு அரசுக்கு மனு செய்தார். சில வாரங்களுக்கு முன்பு அதே காலனியைச் சேர்ந்த சுப்பையா அந்த இடத்தில் கொட்டகை போட்டார். ரவிச்சந்திரன் மகன் ராமு மனித உரிமை அமைப்பு என்ற போர்டை நேற்று மதியம் அந்த இடத்தில் வைத்தார். நேற்று இந்த இடம் தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போர்டை சுப்பையா கோஷ்டி எடுத்து வீசியதாகவும், கொட்டகையை ரவிச்சந்திரன் கோஷ்டி பிரித்து வீசியதாகவும் இருவரும் தனித்தனியாக தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

எஸ்.ஐ.,க்கள் மீனாட்சிசுந்தரம், கருப்பையா ஆகியோர் ரவிச்சந்திரன் மகன்கள் ராமு, லட்சுமணன், மணிகண்டன் சகோதரர்கள் மூவரையும் கைது செய்தனர். மூவரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பு, மகள் மேகலா, காளியம்மாள், கல்யாணி, சக்திவேல்,சுப்பையா ஆகியோரை தேடி போலீசார் வருகின்றனர்.

வாலிபரை கொல்ல முயற்சி மூவருக்கு 3 ஆண்டு ஜெயில்


தேவகோட்டை வள்ளியப்பச் செட்டியார் ஊரணி அருகே குடியிருப்பவர் செல்லமணி. கடந்த 2001 ஜூன் 23 ந்தேதி இரவு இவரது மகன் புரோஸ்கான் மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். இதே ஊரைச் சேர்ந்த அசோக், கண்ணன், விஜயன் மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்து புரோஸ்கானை அழைத்துச் சென்று ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.பலத்த காயங்களுடன் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.போலீசார் அசோக்,கண்ணன், விஜயன் மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த உதவி செசன்ஸ் நீதிபதி தனியரசு மூவருக்கும் தலா மூன்று வருடம் ஜெயில் தண்டனையும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தேவகோட்டையில் இளைஞர் கொலை!தேடப்பட்டவர் சரண்!


தேவகோட்டை, ஆக. 10: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தகராறில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை இரவு குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தேவகோட்டை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. தி.மு.க. நகர துணைச் செயலாளர். இவர் ஒலிபெருக்கி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் (20) (படம்). இவர், அவரது வீட்டருகே திருவிழா நடைபெறும் முத்துமாரியம்மன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஜெயராம் மற்றும் அவரது நண்பர்களுக்கும் கார்த்திகேயனின் நண்பர் இளையராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை அருகே நின்ற கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இரு குழுவினருக்கும் இடையே தகராறு முற்றி, தாக்கிக் கொண்டனர்.      ஜெயராமன், தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, கார்த்திகேயனைக் குத்தினார். கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அங்கு திருவிழாவுக்கு வந்திருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல் துறையினர் கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகர் ஆய்வாளர் செல்வநாதன் வழக்குப் பதிவு செய்து ஜெயராமன், கோவிந்தராஜன், முருகேசன் ஆகியோரைத் தேடி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட ஜெயராமன் ஏற்கெனவே டாக்ஸி ஓட்டுநர் வீரப்பன் கொலையில் முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்த அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கார்த்திகேயனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பிரேத ஊர்வலம் சென்றபோது பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டி ருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேவகோட்டையைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அறந்தாங்கி குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடுவர் த. பன்னீர்செல்வம் முன்னிலையில் புதன்கிழமை சரணடைந்தார். தேவகோட்டை இளைஞர் மு. கார்த்திக் கொலை வழக்கில் போலீஸôரால் தேடப்பட்டவர் ஜெயராமன்  என்று போலீஸôர் தெரிவித்தனர்.

குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »