தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்


தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

யூனியன் கூட்டம்

தேவகோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.செந்தில்நாதன் தலை மையில் நடைபெற்றது. கமிஷனர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி சுந்தர் ராஜன், துணைத் தலை வர் சவுந்தரம் பிர்லா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

கூட்டத்தில் 15 தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுநிதியில் இருந்து ரூ.ஒருகோடியே 15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு:-

பெரியண்ணன் அம்பலம் (அ.தி.மு.க.)- போரிவயல் பாலம் தயார் நிலையில் உள்ளதால் தேவகோட்டை- புலியடிதம்பம் பஸ்சை இயக்க வேண்டும். ஈகரையில் பெரிய பாலம் அமைக்க வேண்டும். தென்னீர் வயலில் திருமண மண்டபம் கட்ட வேண்டும். அங்கு புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டவேண்டும். தேவகோட்டை ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டியவர் களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் முதல்வர் திட்டம் என்பதால் கால தாமதம் செய்யாமல் பணம் பட்டுவாடா செய்யவேண் டும்.

முத்துகுமரேசன் (அ.தி. மு.க.):- கொங்கன்பட்டியில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. பருத்தியூர் மற்றும் சிவனூரில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலை யில் உள்ளதால் மனித உயிர் களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். செழுகையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கவேண்டும்.

சிமெண்டுசாலை

டேவிட் (தே.மு.தி.க.):- கிளியூர் ஊரணி மேல்கரையில் சிமெண்டு சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ராயர்பட்டினத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். வாயிலானேந்தல் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

ஸ்டெல்லா ஜோசப் (அ.தி.மு.க.):- புளியால் பஞ்சாயத் தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்சிராணி (இந்திய கம் யூனிஸ்டு):- விளாங்காட்டூரில் புதிய ரேஷன்கடை கட்ட வேண்டும்.

திருநாவுக்கரசு (அ.தி.மு.க.):- இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்ட பயனா ளிகள் தேர்ந்தெடுக்கும் போது, கவுன்சிலர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மராமத்து


திலகபாரதி (அ.தி.மு.க.):-
திராணியில் இருந்து தேவகோட்டை, சருகனி, புலியடி தம்பம் வழியாக பஸ் விட வேண்டும். திராணி மற்றும் வெள்ளி கட்டியில் திருமண மண்டபம் கட்டவேண்டும். உறுதிகோட்டையில் தண்ணீர் பற்றாக்குறையாகஉள்ளது. அதை போக்குவதற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

லலிதா (அ.தி.மு.க.):– கொடிக்குளம் கண்மாயில் கொடி பூவரசை அகற்றி மண் மராமத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Advertisements

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கோட்டூர் நயினார்வயல் கிராமம் தத்தெடுப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் தேவகோட்டை அருகே கோட்டூர் நயி னார் வயல் கிராமம் தத் தெடுக்கப்பட்டது.

தத்தெடுப்பு விழா

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் வர்த்தக நிறுவனங் களின் சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் கோட்டூர் நயினார்வயல் கிராமத்தை தத்துஎடுக்கும் விழா கலெக்டர் சம்பத் தலைமையில் நடை பெற்றது. பஞ்சாப் நேஷனல் வங்கி துணை பொதுமேலாளர் சோம.வீரப்பன் முன்னிலை வகித்து பேசியதாவது;-

எங்கள் வங்கி 116 கிராமங்களில் தத்தெடுக்கும் திட்டத்தினை நாடுமுழுவதும் அமல்படுத்தியுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்கனவே விழுப் புரம் மாவட்டத்தில் அணங் கூர் கிராமத்தை கடந்த மாதம் தத்தெடுத்தது. தற்போது, தேவ கோட்டை அருகே உள்ள கோட்டூர் நயினார்வயல் கிரா மத்தை தத்தெடுத்துள்ளது.

அடிப்படை வசதிகள்

இந்த கிராமத்தில் சுகாதாரம், சுற்றுபுற சூழல் மேம்பாடு, கல்வி முன்னேற்றம், விவசாய விழிப்புணர்வு, நீர் நிலை ஆதாரங்களை மேம்படுத்துதல் போன்ற அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை மக்கள் பிரதிநிதிகளின் உறு துணையோடு செயல்படுத்த உள்ளோம். மேலும் அந்த கிராமத்தில் சமூக நூலகம், முதியோர் கல்வி முகாம், சுயஉதவிகுழுக்கள், சமுதாய கழிப்பறை வங்கி சார்பாக ஏற்படுத்தி கொடுக்கப்படும். விரைவில் தேவகோட்டையில் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையும் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டூர் நயினார்வயல் ஊரணியை ஆழப்படுத்தி மழைநீர் சேகரிப்பு வேலையை தொடங்கி வைத்து கலெக்டர் சம்பத் பேசும்போது, கிராம முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு மிகவும் போற்று தலுக்கு உரியது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சமுதாயமுன் னேற்றத்தில் பொறுப் புகள் உண்டு. அந்த சமூக பொறுப் பினை சீரியபணியாற்றும் பஞ் சாப் நேஷனல் வங்கி அதி காரிகளை பாராட்டுகிறேன். கோட்டூர் ஊராட்சியில் மட் டும் 60 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு வளர்ச்சி திட்டங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் அளவு குறைந்து கொண்டே வருகிறது.இதுபோன்ற குளங்களை தூர் வாறுவதன் மூலம் மழை நீரை சேமிக்க முடியும் என்று கூறி னார்.

பொது அறிவு புத்தகம்

விழாவில் இந்த கிராமத்தில் படிக்கும் மாணவ-மாணவி களுக்கு கம்ப்ïட்டர் அறிவாற் றலை பெருக்க புதிய கம்ப்ïட் டர் ஒன்று வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் பொதுஅறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழாவுக் கான ஏற்பாடுகளை வங்கி முதன்மை மேலாளர் கணே சன், முதுநிலை மேலாளர் மைக்கேல், மேலாளர்கள் பாண்டியராஜன், சுப்பிரமணி, சிவக்குமார், பிள்ளையார் பட்டி உழவர்பயிற்சி மைய இயக்குனர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், அகஸ்தீஸ்வரர் கோவில் ஆலய பொறுப்பாளர் மாயாண்டி ஆகியோர் பேசினர்.

கிராமங்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இடப்பிரச்னை கோர்ட் உத்தரவு


ஆறாவயல்: தேவகோட்டை மாந்தோப்பு வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். சில ஆண்டுகளுக்கு முன், பனிப்புலான்வயல் கிராமத்தில், சிலரிடம் இடங்களை வாங்கினார். வேதம்மாள் என்பவர் வசிக்கும் இடமும் இதில் உள்ளது. இதுதொடர்பாக முத்துக்குமார் என்பவருக்கும், வேதம்மாளுக்கும் பிரச்னை உள்ளது. கடந்த மார்ச் 10 ம் தேதி, வீட்டை காலி செய்ய சொன்ன போது வேதம்மாள் தரப்பினர், முத்துக்குமாரை மிரட்டினர்.

வழக்கு பதிவு செய்ய கோரி அவர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வேதம்மாள், மகள் சவுந்தரம், மருமகன் சோலை, பேரன்கள் பாண்டி, ரவி, சேகர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்ய, கோர்ட் உத்தரவிட்டது. எஸ்.ஐ., புவனேஸ்வரி விசாரிக்கிறார்.

கிராமங்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டை அருகே சம்பவம் வட்டிக்கடை அதிபரை கொலை செய்ய முயற்சி; நள்ளிரவில் வந்த கொள்ளையர் ஆத்திரம்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த புளியடி தம்மம் அருகே உள்ள சீனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் செட்டியார் (வயது70). இவரது மகன் லட்சுமணன் (52). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகள் வரை மலேசியாவில் தங்கி தொழில் செய்து வந்தனர். தற்போது சீனமங்கலம் கிராமத்தில் வட்டிக்கடை வைத்துள்ளனர். இவர்களிடம் அந்த கிராமத்தை சேர்ந்த மற்றும் வெளியூர் நபர்கள் ஏராளமானோர் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த லட்சுமணன் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்து வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 2 “மர்ம” ஆசாமிகள் திடீரென லட்சுமணனின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினர். உடனே லட்சுமணன் கூச்சல் போட்டார். இதைக் கேட்டு அவரது தந்தை மாதவன் செட்டியார் ஓடி வந்தார். அதற்குள் அந்த கும்பல் மாதவன் செட்டியாரை அரிவாளால் வெட்டுவதற் காக பாய்ந்து வந்தது.

லட்சுமணனும் மாதவன் செட்டியாரும் சேர்ந்து அந்த கும்பலை கம்பு மற்றும் கட்டைகளால் அடித்து துரத்த முயன்றனர். ஆனாலும் கொள்ளை கும்பல் தந்தை மகன் இரு வரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1983-ம் ஆண்டு இதே மாதவன் செட்டியார் வீட்டில் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அப்போது தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி சரோஜா ஆச்சியை கொலை செய்து விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

கடந்த வாரம் தேவகோட்டை அருகே வட்டிக்கடையில் வேலை பார்த்து வரும் ரவீந்திரன் என் பவரை கொலை செய்த “மர்ம” கும்பல் அவரிடம் இருந்து வட்டிக்கடை பீரோ சாவியை பறித்து சென்றது. தேவகோட்டை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

கிராமங்கள், குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மாணவர்கள் கோரிக்கை


தேவகோட்டை அருகே கீழஉச்சாணியை சேர்ந்த மாணவர்கள், கலெக்டர் மகேசன் காசிராஜனிடம் அளித்த மனு:இக்கிராமத்திற்கு அருகே குளமங்கலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராமங்கள், பள்ளிகளுக்கு மையமாக கீழஉச்சாணி உள்ளது. இப்பகுதியில் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். இக்கிராமத்தில் நூலகம் கட்டினால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »