யாதவா நர்சரி பள்ளி ஆண்டு விழா


தேவகோட்டை யாதவா நர்சரி மற்றும் துவக்கப் பள்ளியின் 31-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு யாதவா சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை முருகேஸ்வரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிவகங்கை மாவட்டக் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

மின் வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை வாழ்த்தினார். சங்கச் செயலாளர் கோட்டை, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisements
கல்வி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மாணவர்கள் மதிப்பெண்ணுடன் பிற திறமைகளையும் வளர்க்கவேண்டும்


மாணவர்கள் படிக்கும்போது மதிப்பெண் பெறுவதோடு பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணைய கௌரவ உறுப்பினரும், புதிதில்லி ரியாஸ் சிவில் அகாதெமி தலைவருமான முனைவர் ராமசாமி தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியது:

நீங்கள் கல்லூரியில் பெறும் மதிப்பெண் வேலைக்கு செல்வதற்கான உரிமமம் மட்டும் தான். பிற திறமைகள்தான் உங்களை வாழ்க்கையில் உயர்த்த உதவும்.

நல் ஒழுக்கத்தை பாடப் புத்தகங்கள் வழங்க இயலாது. நீங்கள் பட்டப்படிப்பு

முடித்தவுடன் கற்ற கல்வியைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் பட்டப்படிப்புடன் நின்றுவிடாமல் உயர் கல்வி கற்க வேண்டும்.

எந்தக் குழந்தையும் பிறக்கும்போது திறமையாகப் பிறப்பதில்லை.

கல்வி மட்டும்தான் திறமையை வளர்க்க உதவுகிறது. கல்வியும் உருவாக்கும் திறனும் ஒன்றுக்கு ஒன்று இணைந்தவையாக இருக்க வேண்டும்.

இன்று ஐ.ஏ.எஸ் தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெறும் மதிப்பெண் மட்டும் பெற்றால் போதாது.

நல்ல பேச்சுத் திறமை இருக்கவேண்டும்.

அங்கு உங்களது நல் ஒழுக்கம் பல்வேறு கேள்விகள் கேட்பதன் மூலம் சோதிக்கப்படுகிறது.

உங்களது பட்டப்படிப்புக்கு பிறது நீங்கள் கட்டாயம் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நிலை குறித்து முடிவெடுங்கள். முடிவு எடுப்பதோடு அதை அடைந்து காட்டவேண்டும் என்று ராமசாமி பேசினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் புஷ்பராஜ் வரவேற்றார். செயலாளர் சூசைமாணிக்கம் ஜெபம் செய்தார். தேர்வுத்துறை பொறுப்பாளர் ஜோசப் ஜான் கென்னடி உறுதிமொழி வாசித்தார்.

துணை முதல்வர் ஜான்வசந்தகுமார் மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதில் முன்னாள் செயலர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டாக்டர் செபாஸ்டியான் அன்னம்மாள் மக்கள் கல்லூரியில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேதகு ஆயர் எட்வர்டு பிரான்சிஸ் கல்வி சேவை அறக்கட்டளை மற்றும் மனித உரிமைகள் கழகம், ஒய்ஸ்மென் கழகம் சார்பில் நடைபெற்ற, இவ் விழாவுக்கு காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் சொர்ணலிங்கம் தலைமை வகித்தார்.

ஆனந்தா கல்லூரி செயலாளர் சூசைமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகாடி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ராமநகர் பங்குத்தந்தை முனைவர் சந்தியாகு, வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் வலம்புரி சவரிமுத்து ஆகியோர் பேசினர்.

300 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ பேசியது:வறுமையால் சில மாணவ மாணவிகள் கல்வியை தொடர முடியாமல் உள்ளனர். இந்நிலையை மாற்ற தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்விக்காக தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில், காளிமுத்துசேர்வை, நகர்மன்ற உறுப்பினர் செல்லமுத்து, காரை மோகன், சுந்தரலிங்கம், சுப.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மக்கள் கல்லூரி துணைத் தலைவர் மகபூப்பாட்சா வரவேற்றார். தலைவர் போஸ்கோ நன்றி கூறினார்.

பள்ளிகளில் இடம் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் தவிப்பு


தேவகோட்டை : தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டுவதால், இடம் கிடைக்காமல் பெற்றோர் தவிக்கின்றனர். தேவகோட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. கிராமபுற மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிப்பிற்கு கூடுதல் செலவானாலும் தேவகோட்டை நகரில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். அனைவரும் நகர் பகுதிக்கு வருவதால் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அரசு பள்ளிகள் இருந்தாலும், தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத நிலை உள்ளதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடப்பது தொடர்கிறது. நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது பற்றி பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், தற்போதே மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் காரணமாக மைக் மூலம் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

ஆசிரியர்கள் எவ்வளவு தான் சப்தமாக பாடம் நடத்த முடியும். மாணவர்களை சேர்க்கும் அளவிற்கு பள்ளிகளில் வசதிகளை செய்ய வேண்டியது உள்ளது. அரசு பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், அங்கும் மாணவர்களை பெற்றோர் சேர்க்க தயங்குகின்றனர் என்றார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தேபிரித்தோ பள்ளி ஆண்டு விழா


நாம் கல்வி பயிலும் பள்ளி ஆலயத்துக்குச் சமமானது என சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தேபிரித்தோ பள்ளியின் 67-வது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவரும், காந்தி கிராம பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ராமசாமி தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:

படிக்க பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிகம் படித்தவர்களைக் காண இன்னும் சில காலம் ஆகும். கல்வி பயிலும் கல்விக்கூடங்களும் ஆலயங்கள்தான்.

ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானது. இதில் மகத்துவம் உள்ளது. வாழ்க்கையில் நேர்கோட்டில் வாழவேண்டும். இதற்கு நல்ல கல்வியைக் கற்றால்தான் முடியும். நம்முடைய பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்.

ஆனால் இறுதிக்காலம் பேசப்படும் அளவுக்கு இருக்கவேண்டும். ஏன், எதற்கு, எப்படி முடியும் என்ற கேள்விகளை மாணவர்கள் அதிகம் கேட்க வேண்டும். அப்போது உங்களது அறிவை பெருக்கிக்கொள்ள முடியும் என்று அவர் பேசினார்.

முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் அமல்ராஜ் வரவேற்றார்.

திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் வில்சன் அறிக்கை வாசித்தார். ஆசிரியர் அலுவலர் சங்க செயலாளர் பிரபுலின்பாபு நன்றி கூறினார்.   கவிஞர் பிரைட் எழுதிய நூற்றுக்கு நூறு என்ற ஒலி, ஒளி நாடகம் நடைபெற்றது.

இதில் சார்பு நீதிபதி தனியரசு, பள்ளி அதிபர் ஜான்லூர்து, ஆனந்தா கல்லூரிச் செயலர் ஆரோக்கியசாமி, முதல்வர் புஷ்பராஜ், வளன் இல்ல இயக்குநர் செபாஸ்டியன்,  அருட்தந்தையர்கள் லியோதாகூர், அகஸ்டின், தனிஸ்லாஸ், ஜான்வசந்தகுமார், காங்கிரஸ் பிரமுகர் சபாபதி, இன்பண்ட் மெட்ரிக். பள்ளித் தலைமையாசிரியை ஷீனாஜோசப்   கலந்து கொண்டனர்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வினாடி வினா போட்டியில்வென்ற பள்ளிகள்


தேவகோட்டை:தேவகோட்டை வட்ட அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டிகள் நடந் தன. ஆசிரியர்கள் குமரப்பன், எட்வின், நாகராஜன், சண்முகவள்ளி, சுலோச்சனா, மஞ்சுளா போட்டிகளை நடத்தினர்.

போட்டி முடிவுகள்:பிளஸ் 2 பிரிவு: தே பிரித்தோ பள்ளி மாணவர்கள் இனியன், ஜோதிபாசு, பாண்டித்துரை முதலிடம்; புனித மரியன்னை பள்ளி சுகன்யா, ரம்யா, வசுதா இரண்டாமிடம்; நகரத்தார் பள்ளி சரவணன், சுந்தரவேலன், சூரஜ் மூன்றாமிடம்.9, 10 ம் வகுப்பு: சண்முகநாதபுரம் பி.எஸ்.எஸ். உயர்நிலைப்பள்ளி யோகநந்தன், ஸ்டீபன், கார்க்கி முதலிடம்; பெரியகாரை அரசு உயர்நிலைப்பள்ளி பழனிக்குமார், லாவண்யா, நந்தகுமார் இரண்டாமிடம்; ஜமீன்தார் தெரு உயர்நிலைப்பள்ளி சுர்ஜித், ஆசைத்தம்பி, சூர்யா மூன்றாமிடம்.6,7, 8 வகுப்பு: ராம்நகர் புனித வளன் நடுநிலைப்பள்ளி அபிராமி, லீலாவதி, விஜயா முதலிடம்; பெத்தாள் ஆச்சி மேல்நிலைப்பள்ளி மேகலா, காவிரிதேவி, சித்திஹாஸ்மா இரண்டாமிடம்; புனித மரியன்னை பள்ளி ருத்ரா, பிரியா, பிரியங்கா மூன்றாமிடம் பெற்றனர்.

முதலிடம் பெற்றவர்கள், மாவட்ட போட்டியில் பங்கேற்பர். நடையாளர் சங்க உறுப்பினர் கள், லோட்டஸ் வெங் கடாசலம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள், அறிவியல் இயக்க பொருளாளர் நாகராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டையில் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி இன்று தொடக்கம்


தேவகோட்டை, ஜூலை 3: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் முள்ளிக்குண்டு அருகே செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியை, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சனிக்கிழமை மாலை திறந்துவைக்கிறார்.

நகர்மன்ற உறுப்பினராக உள்ள மறைந்த தொழிலதிபர் சின்னப்பனின் மகன் மைக்கேல் சகாய அன்பு, இந்தக் கல்லூரியைக் கட்டி உள்ளார்.

இதன் திறப்புவிழாவில், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமைவகித்து,  கல்லூரியைத் திறந்துவைக்கிறார். திருவாடானை எம்.எல்.ஏ ராமசாமி முன்னிலை வகித்து, மறைந்த சின்னப்பனின் திரு உருவப்படத்தை திறந்துவைக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம் (காரைக்குடி), சுப்புராம் (திருமயம்), அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி, தி.மு.க தலைமை தணிக்கைக்குழு உறுப்பினர் காசிநாதன், தமிழக சேமிப்புக் கிடங்குகள் நிறுவனத் தலைவர் ஜோன்ஸ் ரூசோ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரித் தலைவர் மைக்கேல் சகாய அன்பு, செயலர்  தேன்மொழி அன்பு, அவரது சகோதரர்கள் ஜெயம் அன் கோ ஆரோக்கிய செல்வம், தூயபால் கல்வியியல் கல்லூரித் தலைவர் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »