தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்


தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.15 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

யூனியன் கூட்டம்

தேவகோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.செந்தில்நாதன் தலை மையில் நடைபெற்றது. கமிஷனர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி சுந்தர் ராஜன், துணைத் தலை வர் சவுந்தரம் பிர்லா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

கூட்டத்தில் 15 தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுநிதியில் இருந்து ரூ.ஒருகோடியே 15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு:-

பெரியண்ணன் அம்பலம் (அ.தி.மு.க.)- போரிவயல் பாலம் தயார் நிலையில் உள்ளதால் தேவகோட்டை- புலியடிதம்பம் பஸ்சை இயக்க வேண்டும். ஈகரையில் பெரிய பாலம் அமைக்க வேண்டும். தென்னீர் வயலில் திருமண மண்டபம் கட்ட வேண்டும். அங்கு புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டவேண்டும். தேவகோட்டை ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டியவர் களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் முதல்வர் திட்டம் என்பதால் கால தாமதம் செய்யாமல் பணம் பட்டுவாடா செய்யவேண் டும்.

முத்துகுமரேசன் (அ.தி. மு.க.):- கொங்கன்பட்டியில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. பருத்தியூர் மற்றும் சிவனூரில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலை யில் உள்ளதால் மனித உயிர் களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். செழுகையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கவேண்டும்.

சிமெண்டுசாலை

டேவிட் (தே.மு.தி.க.):- கிளியூர் ஊரணி மேல்கரையில் சிமெண்டு சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ராயர்பட்டினத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். வாயிலானேந்தல் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.

ஸ்டெல்லா ஜோசப் (அ.தி.மு.க.):- புளியால் பஞ்சாயத் தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்சிராணி (இந்திய கம் யூனிஸ்டு):- விளாங்காட்டூரில் புதிய ரேஷன்கடை கட்ட வேண்டும்.

திருநாவுக்கரசு (அ.தி.மு.க.):- இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்ட பயனா ளிகள் தேர்ந்தெடுக்கும் போது, கவுன்சிலர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மராமத்து


திலகபாரதி (அ.தி.மு.க.):-
திராணியில் இருந்து தேவகோட்டை, சருகனி, புலியடி தம்பம் வழியாக பஸ் விட வேண்டும். திராணி மற்றும் வெள்ளி கட்டியில் திருமண மண்டபம் கட்டவேண்டும். உறுதிகோட்டையில் தண்ணீர் பற்றாக்குறையாகஉள்ளது. அதை போக்குவதற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

லலிதா (அ.தி.மு.க.):– கொடிக்குளம் கண்மாயில் கொடி பூவரசை அகற்றி மண் மராமத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Advertisements

ஆக்கிரமிப்பு அகற்றும்போது அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. தேவகோட்டை நகரசபை கூட்டத்தில் விவாதம்


தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது அரசியல் தலையிடு இருக்க கூடாது என்று நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

தேவகோட்டை நகரசபை அவசர கூட்டம் அதன் தலை வர் கே.ஆர்.சுமித்ரா ரவிக் குமார் தலைமையில் நடை பெற்றது. கமிஷனர் இசக்கி யப்பன், என்ஜினீயர் செல்வ ராஜ், துணைத்தலைவர் சுந்தர் லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ரமேஷ் (சுயே):- தேவ கோட்டை பஸ்நிலையத்தில் 30 கடைகளை வாடகைக்கு விட்டு 300 கடைகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. இத னால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

போஸ் (அ.தி.மு.க.):-
பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுத்தம் செய்யப் படாததால் பஸ்நிலையமே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல தொற்றுநோய் ஏற்படுகி றது. எனவே அதை இடித்து விடுங் கள் அல்லது பராமரிப்பு செய்யுங்கள்.

அரசியல் தலையிடு கூடாது

கமிஷனர்:- பஸ்நிலைய ஆக் கிரமிப்புகள் விரைவில் அகற் றப்படும். இதுபோன்ற ஆக்கி ரமிப்புகள் அகற்றப்படும் போது, கவுன்சிலர்கள் யாரும் குறுக்கிடகூடாது. 27 வார்டு களிலும் உள்ள ஆக்கிரமிப்பு களை ஒருவாரகாலத்திற்குள் போலீஸ் உதவியுடன் நான் அகற்றிவிடுகிறேன். இதில் எந்த அரசியல் தலையிடும் இருக்க கூடாது. அதற்கு அனைத்து கவுன்சிலர்களும் தயாராக இருக்கிறீர்களா?.

இளங்கோ(தி.மு.க.):– எனது வார்டில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற கூடாது.

சுப்பிரமணியன்(சுயே):- தேவகோட்டையில் தெரு விளக்குகள் சரியாக எரிவ தில்லை. ராம்நகரில் உள்ள மிகப்பெரிய பூங்கா இருளில் மூழ்கியுள்ளது.

என்ஜினீயர்:– பைமாஸ் விளக்குகளை அதை நிறுவி யவர்களே பராமரிக்க வேண் டும் என்பதால் ஒரு மாத காலத்திற்குள் அதை சரி செய்துவிடுகிறோம்.

குடிநீர்பிரச்சினை

ரமேஷ்:- தேவகோட்டை யில் குடிநீர்பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறி வரு கிறது.

என்ஜினீயர்:- மின்தடை தான் அதற்கு காரணம்.

பெரிபாலா(தி.மு.க.):- நகர் மன்ற தலைவர் மற்றும் அதி காரிகள் இணைந்து மின்தடை இருப்பதால் தண்ணீரை சிக் கனப்படுத்துங்கள் என்று அறி விப்பு செய்ய வேண்டும்.

பெரியாள்(அ.தி.முக.):- வாரசந்தையில் உள்ள ஓவர் டேங்கில் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக குடிநீர் வருகிறது.

தலைவர்:-எப்போதில் இருந்து வருகிறது.

பெரியாள்:- ஒருவாரமாக வருகிறது.

தலைவர்:- நான் தினமும் அலுவலகத் திற்கு வருகிறேன். நீங்கள் என்னிடம் அப்போது கூறியிருந்தால் அன்றே நடவ டிக்கை எடுக்கப்பட்டு இருக் கும். இனிமேல் அந்தந்த வார்டு களில் உள்ள பிரச்சினைகளை தினமும் எனது கவனத்துக்கு கொண்டுவந்தால் அவ்வப் போது தீர்க்கப்பட்டு விடும். அதை விடுத்து மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தில் வந்து குறைசொல்வதை நிறுத்தி கொள்ளவேண்டும். இனி கவுன்சிலர்கள் கூட்டங்களில் பேசும்போது, தலைவரை தவிர அனைவரும் எழுந்து நின்று தான் பேச வேண்டும்.

துணைத்தலைவர்:- குறைகளே சொல்லக் கூடாது.

தலைவர்:-கவுன்சிலர்கள் கூறும்குறைகளை நாங்கள் செய்யவில்லை என்றால் இங்கு வந்து கூறுங்கள். இங்கு பேசப்படும் குறைகளை குறித்து வைத்துகொண்டு அவைகளை உடனடியாக அதிகாரிகள் தீர்க்கவேண்டும். அடுத்த கூட்டம் வரும்வரை காத்திருக்க கூடாது.

நாய்களுக்கு அடையாளம்

வீரப்பன் (அ.தி.மு.க):- தியா கிகள் ரோடு, பஸ்நிலைய வீதி, இ.பி.ரோடு ஆகிய வீதி களில் நகராட்சியே கால் வாய் கட்டுகிறோம் என்கிற பெயரில் ஆக்கிரமித்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

பாலு(சுயே):-நாய்களை கருத்தடை செய்யும்போது, அவைகளுக்கு ஏதாவது அடை யாளம் இடப்பட வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

அரசியல், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

தேவகோட்டை நகராட்சியில் கட்சிகள் கை கழுவிய வார்டுகள்


தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.இதில் அ.தி.மு.க.,வை தவிர எந்த கட்சியும் 27 வார்டுகளுக்கு போட்டியிடவில்லை. சில வார்டுகளில் போட்டியிட யாரும் வரவில்லை என்றும்,சில வார்டுகளில் “சிறப்பு கவனிப்பு’ காரணமாகவும் போட்டியிடவில்லை. கட்சிகள் கைகழுவிய வார்டுகள்:

தி.மு.க., : 1, 2, 6, 9, 12, 23,
காங்.,: 4, 5, 7, 15, 18, 21, 23, 24, 27.
தே.மு.தி.க. : 5, 6, 7, 11, 12, 13,15, 20, 23, 25, 27,

தமிழகத்தின் பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் தி.மு.க.,6 இடங்களிலும், சட்ட மன்ற எதிர்கட்சியானதால் நாங்கள் தமிழகத்தின் இரண்டாவது கட்சிஎன்று மார்தட்டும் தே.மு.தி.க., 11 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிட வில்லை. 23 வது வார்டில் அ.தி.மு.கவை தவிர எந்த கட்சியும் போட்டியிடவில்லை. சுயேச்சைகள் 4 பேர் போட்டியிடுகின்றனர்.12 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட தியாகராஜன் வேட்பு மனுதாக்கல் செய்தார். நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தார். கடைசி நிமிடம் வரை கட்சி அனுமதி கடிதம் கொடுக்காததால் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சிலம்பணி கோயில் அழகுபடுத்தப்படும்


தேவகோட்டை நகராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெகநாதன் போட்டியிடுகிறார். வீரபாண்டியபுரம் கிழக்கு,மேற்கு, நடுத்தெரு, மற்றும் சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி வீதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அவர் கூறியதாவது: மக்களின் அத்தியாவசிய தேவைகளை உரிய அதிகாரிகளை அணுகி நிறைவேற்றி வருகிறேன். தொடர்ந்து வழக்கமான பிரச்னையான குடிநீர், தெருவிளக்கு, சாலைகளை சரி செய்வேன். சிலம்பணி விநாயகர் கோயிலுக்கு பெண்கள் அச்சமின்றி செல்ல கூடுதல் தெருவிளக்கு, கோயிலை சுற்றி அசுத்தம் செய்யாமல் தடுக்கப்படும். அப்பகுதியில் நவீன சுகாதார வளாகம் கட்டப்படும். அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை மூலம் சிறுவர் பூங்கா அமைத்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் அழகுபடுத்தப்படும்.

சிலம்பணி ஊரணி தூர்வாரி படி கட்டப்படும். அனைத்து ரோடுகளிலும் கழிவுநீர் தேங்காமல் ஓட சாக்கடைகள் சீரமைக்கப்படும். மிக்சி,கிரைண்டர், பேன், அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர். ஜெ. துவக்கி வைத்த குறைந்த செலவில் அரசு கேபிள் இணைப்பை காலம் தாழ்த்தாமல் 14 வது வார்டு பகுதிக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தன்னிறைவு பெற்ற வார்டாகும் : காங்., வேட்பாளர் ராமு உறுதி


தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங்., சார்பில் ராமு போட்டியிடுகிறார்.

பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது: 60 ஆண்டு காங்.கட்சியில் பணியாற்றி எல்லோரும் அழகிரி என்று அழைக்கும் அழகர்சாமி மகன் என்பதால் மக்கள் ஆதரவு உள்ளது.குடிநீர் ,தெருவிளக்கு பிரச்னைகளை நிறைவேற்றுவேன். விரிவாக்கப்பகுதி என்பதால் மேம்பாட்டு வரிமூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைத்தாலும் தொடர்ந்து 3 வது வார்டு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. காமாட்சியம்மன் நகர், காடேரியம்பாள், மீனாட்சி நகர், ரமணமகரிஷி நகர் பகுதிகளில் தார் சாலை , தெருவிளக்கு அமைக்கப்படும். விவேகானந்தபுரம் சாலையில் தூர்ந்து போன கால்வாயை சீரமைத்து மழைநீர் செல்ல வடிகால் கட்டப்படும். முத்துராஜா நகர், பாரதி தெரு பகுதியில் தார் சாலை அமைக்கப்படும். நகராட்சி நிதியோடு எம்.பி.க்கள் நிதி உதவி பெற்று வார்டின் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படும். ஜெயங்கொண்ட விநாயகபுரத்தில் தெருவிளக்குகள் அமைத்து, மின்சாரம் இல்லாவிடினும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணாசாலையில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொண்டு நிறுவன உதவியோடு பூங்கா அமைக்கப்படும். ஒரு முறை வாயப்பு தந்தால் மறுமுறையும் மீண்டும் அமர்த்துமளவில் எனது பணிகள் அமையும். பின்தங்கிய மூன்றாவது வார்டை முன்மாதிரியாக தன்னிறைவு பெற்ற வார்டாக மாற்றுவேன். என்றார்.

உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும் : தேவகோட்டை அ.தி.மு.க., வேட்பாளர் சுமித்ரா


தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவி அ.தி.மு.க. வேட்பாளர் சுமித்ரா முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது: எனது மாமனார் 1972 முதல் தீவிர உறுப்பினர். அவருடைய கட்சிப்பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக முதல்வர் நகராட்சிதலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் என்னை போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். தேவகோட்டையிலேயே பிறந்து வளர்ந்து இந்த நகரிலேயே எப்போதும் வசிக்கும் அரசியல் கட்சி வேட்பாளர் நான் மட்டுமே. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தலைவராக இருந்த ராமவெள்ளையன் செட்டியாருக்கு பிறகு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு முதல்வர் ஜெ. ஆசியுடன் எனக்கு கிடைத்துள்ளது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ராமவெள்ளையன் தலைவராக இருந்தபோது தான் இன்றும் தேவகோட்டையில் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவமனை, கல்லூரி கொண்டு வரப்பட்டது. தற்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான என்னை தேர்ந்தெடுத்தால் முதல்வரின் ஆசியுடன் காலம் போற்றும் நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்பட்டு வடிகால் கட்டப்படும். முதல்வர் ஜெ., அறிவித்த திட்டங்களான இலவச மிக்சி,கிரைண்டர், பேன் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் துவங்கி வைத்த குறைந்த கட்டண அரசு கேபிள் இணைப்பு தேவகோட்டை நகரிலும் மிக விரைவில் கிடைக்க சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். என்றார்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

பணப்பட்டுவாடா மாற்றி யோசியுங்கள் ஸ்ரீ: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பஞ்சநாதன்


தேவகோட்டை 20 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் பஞ்சநாதன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிடுங்கள். தகுதியற்றவர்கள் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை விலைக்கு வாங்குவார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொடு வீட்டுக்கும் முன்னும் ஓட்டுக்கள் விற்பனைக்கு இல்லை என்ற வாசகங்களை தொங்க விடவேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் துணிச்சல் வாக்காளர்களுக்கு தான் உண்டு. தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு வந்து போகும். ஒருநாள் பணம் 5 ஆண்டுகளுக்கு தீர்வாகாது. இந்த விஷயத்தை மக்கள் சிந்துத்து வாக்களிக்க வேண்டும். இந்திய அரசு பெருவாரியான மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் வைத்துள்ளதால் இது விஷயமானதாக இல்லை. வேட்பாளர் நேர்மையான, ஒழுக்கம் உள்ளவர்களாக, பொது நல சேவையில் ஈடுபடுவர்களாக இருக்க வேண்டும். என்றார்.