ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு


தேவகோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.கவுன்சிலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவரும், தேவகோட்டை யூனியன் அ.தி.மு.க.வுன்சிலருமான தென்னீர்வயல் கே.ஆர்.பெரியண்ணன் அம்பலம் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தேவகோட்டை வளர்ந்து வரும் நகரம் ஆகும். தேவகோட்டையை சுற்றி ஏராள மான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தேவகோட்டை பஸ்நிலையத்தில் இறங்கி தான் தமது சொந்த வேலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த பஸ் நிலையம் திருச்சி- ராமேசுவரம் சாலையில் அமைந்துள்ளதால் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பஸ் நிலையம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பூக்கடைகள் மற் றும் தின்பண்டகடைகள் வைத்து மறைத்துவிடுவதால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிபடும் நிலை உள்ளது.

கோரிக்கை

எனவே பஸ் பயணிகளுக்கு உரிய நிழற்குடை அமைத்து, பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கி ரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Advertisements
செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

2 பதில்கள் to “ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு”

  1. karparaja Says:

    நம்ம ஊரு எப்ப மாறும்னு வெயிட் பண்றேன் ஆனால் மாறவே மாடின்குது , உங்களுடைய செயல் வணக்கத்துக்குரியது

  2. KANNAN Says:

    NALLATHU SEIREENKA NALLARUPINKA


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: