தேவகோட்டை அருகே தென்னீர்வயலில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை


தேவகோட்டை அருகே வீட்டுகதவை உடைத்து நகை-பணத்தை கொள் ளையடித்தவர் களையும், பள்ளியில் கம்ப்yuட்டர் திருடிய ஆசாமிகளையும் போலீசார் தேடி வருகின் றனர்.

நகைபணம் கொள்ளை

தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிரா மத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 65). இவரது கணவர் இறந்து விட்டார். மகன்கள் வெளியூரில் வசித்து வருகின் றனர். சம்பவத்தன்று காந்திமதி வீட்டை பூட்டிவிட்டு, 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார்.

வேலை முடிந்து திரும்ப வீட்டுக்கு வந்த போது, வீட் டின் பின்பக்க கதவு உடைக் கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.13ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காண வில்லை. யாரோ மர்ம ஆசா மிகள் அவற்றை திருடி சென்று விட்டனர்.

பள்ளியில் திருட்டு

தேவகோட்டையை அடுத்த புளியாலில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி யில் பள்ளி அலுவலக பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கம்ப்யூட்டரை மர்ம ஆசாமி கள் திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.50ஆயிரம் ஆகும். 2 திருட்டு வழக்குகள் குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முத்துவேல் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட ஆசாமிகளை தேடி வருகிறார்.

Advertisements
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

தேவகோட்டை டாஸ்மாக் பார்களில் ரெய்டு மதுபாட்டில்கள் பறிமுதல்


தேவகோட்டை நகரில் டாஸ்மாக் பார்களில், அதிகாலையில் மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, எஸ்.ஐ.க்கள் ராமர், செல்வகுமார், சந்தான கார்த்திகா ஆகியோர் பார்களில் சோதனை செய்தனர்.

ஆறு பார்களில் நடத்திய சோதனையில், மதுவிற்ற, முத்து, கார்த்திக், மூர்த்தி, சண்முகம், செல்வம், லட்சுமணன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 54 மது பாட்டில்கள், 19,450 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தானுச்சாவூரணியைச் சேர்ந்த மாணவி கனிமொழி தற்கொலை


தேவகோட்டை அருகே தானுச்சாவூரணியைச் சேர்ந்தவர் தேசிகன்.இவரது மகள் கனிமொழி ,20, பெற்றோர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர். சகோதரரும் கனிமொழியும் மட்டும் இங்கு உள்ளனர். கனிமொழி தனியார் பொறியியற் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து திரும்பிய கனிமொழி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கப்பூரில் உள்ள தேசிகனுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சிலம்பணி ஊரணியில் செத்து மிதந்த மீன்கள்


தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் அருகே உள்ள ஊரணியில் பாலித்தீன், உட்பட கழிவுகளின் நீர்தேக்கமாக காணப்படுகிறது.நேற்று காலை பெரிய பெரிய மீன்கள் செத்து மிதந்தன. ஊரணியிலுள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

நகராட்சி தலைவி சுமித்ரா கூறியதாவது: திடீரென மீன்கள் இறந்து இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.விஷம் கலந்துள்ளதா, செப்டிங் டேங்க் கழிவுகளை இரவில் யாரும் கலந்து விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீரை சோதனைக்கு மதுரைக்கு அனுப்பியுள்ளோம், என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »

ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு


தேவகோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.கவுன்சிலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவரும், தேவகோட்டை யூனியன் அ.தி.மு.க.வுன்சிலருமான தென்னீர்வயல் கே.ஆர்.பெரியண்ணன் அம்பலம் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தேவகோட்டை வளர்ந்து வரும் நகரம் ஆகும். தேவகோட்டையை சுற்றி ஏராள மான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தேவகோட்டை பஸ்நிலையத்தில் இறங்கி தான் தமது சொந்த வேலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த பஸ் நிலையம் திருச்சி- ராமேசுவரம் சாலையில் அமைந்துள்ளதால் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பஸ் நிலையம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பூக்கடைகள் மற் றும் தின்பண்டகடைகள் வைத்து மறைத்துவிடுவதால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிபடும் நிலை உள்ளது.

கோரிக்கை

எனவே பஸ் பயணிகளுக்கு உரிய நிழற்குடை அமைத்து, பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கி ரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை


தேவகோட்டை கண்டதேவி சாலையை சேர்ந்தவர் தங்கம் சீனிவாசன். தொழில் அதிபரான இவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். வீடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் சீனிவாசன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு தங்கம் சீனிவாசனின் மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சரோஜா எழுந்தார். சிறிது நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதற்குள் மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது கொள்ளையர்கள் பணம், நகை எங்கு வைத்து இருக்கிறீர்கள் என்று மிரட்டினர்.

உடனே சரோஜா பணம், நகை எல்லாம் அருகே உள்ள அரிசி ஆலையில் உள்ளது. வீட்டில் நகைகள் இல்லை என்று கூறினார். உடனே கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவை கையில் பிடித்துக்கொண்டு பணம்-நகை எங்கு உள்ளது என்று கூறாவிட்டால் குழந்தையை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

வீட்டில் இருந்த ஒரு பெண் ணையும் பலாத் காரம் செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன சரோஜா மேல்மாடியில் உள்ள பீரோவில் தான் நகை உள்ளது. எங்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.

இதையடுத்து கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 225 பவுன் நகை ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கட்டிக் கொண்டு கீழே வந்தனர். சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோர் கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரிடம் தாலி செயின்களை கழற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் தாலி செயின்களை கொடுக்க மறுத்ததால் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி சரோஜா, நாகலட்சுமி, நிரோஜா கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பறித்துக்கொண்டனர்.

அப்போது ராஜலட்சுமி, எனது தாலி செயினை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கொள்ளையர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினார். இதனால் கொள்ளையர்கள் அவரது தாலி செயினை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். மொத்தம் 225 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம். லேகா என்ற மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தங்கம் சீனிவாசன் வெளியூர் சென்றபோது கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதால் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குற்றங்கள், சம்பவம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரைவண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்

மேலச்செம்பொன்மாரி, ஆறாவயல், பேராட்டுக்கோட்டை, பொன்னி வயல் நாட்டார்கள் இணைந்து மாட்டு வண்டி பந்தயம் நடத்தினர். மாட்டு வண்டி பந்தயம் பெரியமாடு, நடுமாடு,சின்னமாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவாகவும், குதிரை பந்தயம் பெரிய குதிரை, சின்னகுதிரை என 2 பிரிவாகவும் நடைபெற்றது. போட்டிகளில் 50 வண்டிகள் கலந்து கொண்டன.

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடத்தை அடம்பூர் தங்கராஜா வண்டி யும், 2ம் இடத்தை அ.வள்ளாளபட்டி பூஞ்சோலை வண்டியும், 3ம்இடத்தை புதுத் தாமரைப்பட்டி சேதுராமன் வண்டியும் பெற்றது. நடுமாடு பந்தயத்தில் முதல் இடத்தை அவனியாபுரம் முருகன் வண் டியும், 2ம் இடத்தை கொட்டகுடி கண்ணன் வண்டியும், 3ம் இடத்தை மறவனேந்தல் துஸ்டக்கருப்பர் வண்டியும் பெற்றது.

சின்னமாடு பந்தயத்தில் முதலிடத்தை சிங்கத்திருமுருகப்பட்டி செல்லத்துரை வண்டியும், 2ம் இடத்தை நாகப்பன் பட்டி அஜித்குமார் வண்டியும், 3ம் இடத்தை பரளி மணி வண்டியும் பெற்றது. பூஞ்சிட்டு பந்தயதில் முதலிடத்தை மேலூர் புவனேஸ்வரி வண்டியும், 2ம் இடத்தை மணச்சை வெற்றிவிநாயகர் வண்டியும், 3ம் இடத்தை வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அஜ்மல்கான் வண்டியும் பெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

இதேபோல் பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் பேராட்டுக் கோட்டை மாயழகு வண்டியும், 2ம் இடத்தை தீர்த்தப்பூர் சிவபிரகாசம் வண்டியும், சின்னகுதிரை வண்டி பந்தயத்தில் முதலிடத்தை காளையார் கோவில் மேப்பல் சக்தி வண்டியும், 2ம் இடத்தை தீருதப்பூர் சிவபிரகாசம் வண்டியும் பெற்றது.